கலாநிதி மாறன் தந்த அழைப்பிதழ்.. அனிருத் – காவ்யா ரிசப்ஷன் எப்போ தெரியுமா? 5 ஸ்டார் ஹோட்டலில் தடபுடல்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில், நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம், நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு என ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து 2 விதமான கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத்தை, தனுஷ்தான் 3 படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற "ஒய் திஸ் கொலவெறி" பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது. அதன்பிறகு அனிருத்துக்கு அடுத்தடுத்து பெரிய படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத், பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்திலும் அவரது இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவும் , டீக்கடை சீனில் ரஜினிகாந்த் துப்பாக்கியை எடுக்கும்போது, ஒலிக்கும் பின்னணி இசையை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரசித்து கொண்டிருக்கிறார்கள்.
காவ்யா மாறனுடன் திருமணம்?
இந்த நிலையில்தான், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் காவ்யா மாறனும் அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறன், சன் குழுமத்தின் தலைவர். எனினும் 2 தரப்பினரும் இந்தக் காதல் குறித்துப் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.
இப்போது அனிருத், காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கிரீஸுக்கு மாற்றம் ஏன்?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் செஷல்ஸ் நாட்டில் திருமணத்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கிரீஸ் நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடற்கரைகள், அழகிய கட்டிடங்கள், கண்ணை பறிக்கம் இயற்கைக்காட்சிகள் என உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை கொண்டது கிரீஸ்.. திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இடமாக கருதப்படுவதால், கிரீஸ் நாட்டை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள், இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை அழைத்துச் செல்வதற்காக மொத்தம் 4 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரீரெக்கார்டிங் ஒத்திவைப்பு
2வது தகவல்.. நவம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்கு இசை நிகழ்ச்சிகள், படங்களுக்கான ரீ-ரிக்கார்டிங் பணிகள் போன்றவற்றை அனிருத் ஒத்திவைத்திருக்கிறாராம்.
பொதுவாக பிரபலங்களின் திருமணம் என்றாலே எங்கே நடக்கிறது, யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள், மணமக்களின் ஆடை எப்படி இருக்கும் என ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்களும் கவனம் பெற்றுள்ளன.
5 ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்
வெளிநாட்டில் திருமணம் முடிந்ததும், சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது... அதன்படி நவம்பர் 21-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாம்.. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக கலாநிதி மாறனும் அவரது மனைவி காவேரி மாறனும் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்துள்ளனர். ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ரிசப்ஷன் - அழைப்பிதழ்
நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்புக்கான அழைப்பிதழை அவர்கள் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கியுள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.
இசை உலகில் பிரபலமான அனிருத்தும், கிரிக்கெட் உலகில் அறியப்படும் காவ்யா மாறனும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் 2 துறையினரிடமும் பேசப்படுகிறது. நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் திருமணம் நடைபெறுவது குறித்த தகவலுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள வரவேற்புக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
