"சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம்".. ஆர்எஸ் பாரதி மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார். ஆர்எஸ் பாரதியிடம் ரூ.1 கோடி கேட்டு நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பிறகு அவர் இப்படி ஆக்ரோஷமாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 66 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் அதிமுக, பாஜக தலைவர்கள் வலியுறுத்தியது மட்டுமின்றி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் தான் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது.
அதாவது ‛‛கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விஷயத்தில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது'' என தெரிவித்தார். ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
மேலும் ‛‛ஆர்எஸ் பாரதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு, ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்'' என்று அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய ஆர்எஸ் பாரதி, ‛‛மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மாறாக திமுக பற்றிய உங்களின் கருத்துக்கு மன்னிப்பு மற்றும் இழப்பீடாக ரூ.2 கோடி தர வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திமுகவை தொடர்புப்படுத்தியதற்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ரூ.2 கோடியை இழப்பீடாக முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்'' என தெரிவித்தார்.
இதையடுத்து ஆர்எஸ் பாரதியிடம் ரூ.1 கோடி கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்துக்கு நேரில் சென்று அவர் இந்த வழக்கை தொடர்ந்தார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
‛‛திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஜுன் மாதம் 23ம் தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், விஷச்சாராயம் குடித்து 65 பேர் இறந்துள்ளனர். அதன்பிறகு ஜுன் 23ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்எஸ் பாரதி, கள்ளச்சாராய பலிக்கு காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையிதான் கூட்டு சதி செய்து எங்கிருந்தோ கள்ளச்சாராயம் கொண்டு வந்து வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னது பெரிய துக்கத்தை உண்டாக்கி உள்ளது. காரணம், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நாம் போராடி கொண்டிருக்கிறோம்.
நான் அரசியலுக்கு வந்து மூன்றரை ஆண்டுகாலமாக யார் மீதும் நான் அவதூறு வழக்கு கொடுக்கவில்லை. எத்தனையோ பொய், அவதூறுகளை பேசியுள்ளனர். அப்போதெல்லாம் அவதூறு வழக்கு கொடுக்காமல் இப்போது ஏன் கொடுக்கிறேன் என்றால் ஆர்எஸ் பாரதியின் பேச்சு எல்லையை தாண்டி சென்றுவிட்டது. ஒரு சீனியராக 80 வயதை தாண்டி ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியலை பார்த்துள்ள நபர் திமுகவின் காலம் முடிந்துவிட்டது என்பது தெரிந்த பிறகு இத்தகைய அவதூறு பேச்சுக்களும், பொய் பேச்சுக்களும் வர தொடங்கி உள்ளது. அதனுடைய வெளிப்பாடாக தான் இந்த அவதூறை பரப்பி உள்ளார். இதனால் தான் நீதிமன்ற நீதிபதியிடம் ஆர்எஸ் பாரதிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு கொடுத்து இருக்கிறோம்.
ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளோம். இந்த தொகையை பெற்று கள்ளக்கறிச்சியில் மறுவா்வு மையம் அமைப்போம். மனுவில் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இனிமேல் அவரக்கு சம்மன் செல்லும். திமுகுவை யாரும் எதிர்ப்பது கிடையாாது. நமக்கேன் வம்பு என அனைவரும் ஒதுங்கி விடுகின்றனர். ஆர்எஸ் பாரதியை விரைவில் சிறைக்கு அனுப்புவோம்'' என பரபரப்பாக கூறியுள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications