கோட்சே பற்றி ஒரே பேச்சு.. உலகம் முழுக்க வைரலான கமல்.. ஆச்சர்யமூட்டும் கூகுள் ஆதாரங்கள்!

கடந்த 4 நாட்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலின் சர்ச்சை கருத்து... பற்றி எரியும் வடஇந்தியா

    சென்னை: கடந்த 4 நாட்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இந்த கருத்து தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends

    இவருக்கு ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல்ஹாசன் தேசிய அளவில் மட்டுமல்ல உலக அளவில் வைரலாகி உள்ளார்.

    இதை மக்கள் சொல்லவில்லை.. உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின் கூகுள் சொல்லி இருக்கிறது. கடந்த சில நாட்களாக கமல், கமல்ஹாசன், அவர் பேசியது தொடர்பான விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends

    உதாரணமாக kamal என்ற வார்த்தை மீண்டும் நீண்ட நாட்களுக்கு பின் அதிக அளவில் தேடப்பட்டு உள்ளது. தேர்தலுக்கும் முன் உச்சத்தில் இருந்த kamal என்ற வார்த்தை பின் டிரெண்டை விட்டு சென்று மீண்டும் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

    முக்கியமாக பஞ்சாப்பில், சண்டிகரில், கோவையில்தான் kamal என்ற வார்த்தையை மக்கள் அதிகம் தேடி இருக்கிறார்கள். அதே சமயம் kamal haasan என்ற வார்த்தையை எடுத்தால். அது கடந்த ஒரு வாரத்தில் மிக மிக அதிக அளவில் சர்ச் செய்யப்பட்டு உச்சம் பெற்றுள்ளது.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends

    கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு சர்ச் அதிகம் ஆகியுள்ளது. கோவை, மதுரையில் அவரது முழு பெயரை பலர் சர்ச் செய்து இருக்கிறார்கள். கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசித்தான் இப்படி வைரலானார். அதனால் கோட்சே என்ற வார்த்தையும் பெரிய ஹிட் அடித்துள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் கோட்சே என்ற வார்த்தையை இணையத்தில் வரிசையாக பலர் தேடி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகம் முழுக்க கோட்சே பெயரை தேடிய பலர் உடனே கமல்ஹாசன் பெயரை தேடி இருக்கிறார்கள். கமல்ஹாசன் பெயரை தேடிய பலர் உடனே கோட்சே பெயரை தேடி இருக்கிறார்கள்.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends

    அதேபோல் கோட்சே காந்தியை கொன்றது ஏன் என்றும் பலர் கேட்டுள்ளனர். பெரும்பாலும் இந்தியில் இவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதில் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை விழுந்தடித்து பலர் இணையம் முழுக்க கடந்த சில நாட்களில் தேடி இருக்கிறார்கள்.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends

    ஆக, மொத்தம் கமல் ஹாசனின் இந்த பேச்சும், அதை தொடர்ந்து நடந்த சர்ச்சைகளும் அவருக்கு அசாத்திய விளம்பரத்தை தேடிதந்துள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அவர் இந்த சர்ச்சை காரணமாக வைரலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Kamal Haasan became worldwide viral after his remark on Godse - Google Trends
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+