சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் எதிரொலித்த பெரியார்.. டெல்லியில் இருந்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெரியாருக்கும், டெல்லியில் இன்று நடக்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடர்பை ஏற்படுத்தி நெகிழ்ந்தார். . உள்ளார். அவர் என்ன செய்தார்?.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் பெரியார். இவரது உண்மையான பெயர் ஈவெ இராமசாமி. சாதிய பாகுபாடு, மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பெரியார்.

இவரது சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவாதமும் தமிழகத்தில் புகழ்பெற்றது. இவர் இறைமறுப்பாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.

மாஸ்க்கில் சோனியா 'மாஸ் என்ட்ரி'.. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பிரியங்காவும் இணைந்தார்!மாஸ்க்கில் சோனியா 'மாஸ் என்ட்ரி'.. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பிரியங்காவும் இணைந்தார்!

பெரியார் மறைவு

பெரியார் மறைவு

இவர் தமிழ்நாட்டின் பல இடங்களில் சுயமரியாதை மாநாடுகளை நடத்தினார். மேலும் ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். கேரளா வைக்கத்தில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுத்தார். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த இவர் நீதிக்கட்சி தலைவராகவும் இருந்தார். மேலும் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடி இவர் சிறை சென்றுள்ளார். இவர் கடந்த 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி தனது 94வது வயதில் மறைந்தார்.

 முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அதன்படி இன்று பெரியாரின் 49 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியாரின் செயல்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் பெரியாரின் நினைவுநாளையாட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செய்தார். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு, திமுகவின் பொருளாளர் டிஆர் பாலு உள்பட பலர் உடனிருந்தனர்.

பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்

பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்

இந்நிலையில் தான் டெல்லியில் இன்று நடக்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க சென்ற நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்றுள்ளார். அவர் டெல்லியில் இருந்தபடி பெரியாரை நினைவுகூர்ந்து பெரியாருக்கும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கும் கமல்ஹாசன் தொடர்பை ஏற்படுத்தினார்.

கமல்ஹாசன் செய்தது என்ன?

கமல்ஹாசன் செய்தது என்ன?

இதுதொடர்பாக இன்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளை பிரச்சாரம் செய்ததோடு, சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவு நாளில் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்''என கூறியுள்ளார். இவ்வாறு பாரத் ஜோடோ யாத்திரைக்கும், பெரியாருக்கும் கமல்ஹாசன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

பிற தலைவர்கள்...

பிற தலைவர்கள்...

இதேபோல் தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள பெரியாரின் சிலையின் அருகே திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பெரியாரின் செயல்களை நினைவுகூர்ந்து ட்விட்டர்களில் பதிவுகளை செய்து வருகின்றனர்.

English summary
Periyar's 49th death anniversary is being observed today. It is in this context that actor Kamal Haasan, the leader of the People's Justice Center, who participated in Rahul Gandhi's Bharat Jodo Yatra in Delhi today, contacted Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X