கமலுக்கு கடனா? 50 கோடியா? எப்படி பார்த்தாலும் 1000 கோடி கல்லா கட்டிருப்பாரே! உடைத்து பேசிய பிரபலம்!
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் தனது சொத்து விபரங்களை தெரிவித்து இருக்கும் நிலையில், தனக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் எப்படி பார்த்தாலும் குறைந்தபட்சம் ஆயிரம் கோடியாவது கமலுக்கு வருமானம் வந்திருக்கும் எனவும், எப்படி கடனில் இருப்பதாக சொல்றீங்க? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல், வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நான்கில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்திருக்கிறது. கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் காங்கிரஸ்க்கும், மதிமுகவுக்கும், விசிகவுக்கும் தராத வாய்ப்பை கூட்டணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் கமல்ஹாசனுக்கு வழங்கியிருக்கிறது திமுக.
கடந்த காலங்களில் அதிமுகவை விட திமுகவை தான் கமலஹாசன் அதிகம் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக ஸ்டாலின் பேச்சு, நடவடிக்கைகள், அவரது அரசியல் ஆகியவற்றை குறி வைத்து கமல்ஹாசனின் அட்டாக் இருந்தது. இந்த நிலையில் அதையெல்லாம் விட்டுவிட்டு கமல்ஹாசனுக்கு டெல்லி செல்ல வாய்ப்பு அளித்திருக்கிறது திமுக தலைமை.

விக்ரம் படத்தின் மூலம் சினிமாவிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய கமல்ஹாசன், இந்தியன் 2, தக் லைஃப் கொடுத்த தோல்வியால் துவண்டு போயிருக்கிறார். இதை அடுத்து அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என நினைத்தது மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கமல்ஹாசன்.
தனது வேட்பு மனவில், பல்வேறு தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இது மட்டுமல்லாமல் 2023 2024 இல் தனக்கு கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், 245 கோடி அசையா சொத்துக்கள், 59 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளது எனவும், நான்கு வணிக கட்டடங்களில் மதிப்பாக 112 கோடி, திண்டுக்கல்லில் 22 கோடிக்கு விவசாய நிலம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் அவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 8.40 கோடி எனவும், கையிருப்பில் இரண்டு லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் கமலின் மொத்த சொத்து மதிப்பு 305 கோடி ரூபாய் இருக்கும் என கூறி இருக்கிறார். மேலும் தனக்கு கடனாக 49 கோடியே 67 லட்சம் ரூபாய் உள்ளது எனக் கூறியிருந்தார் கமல்ஹாசன். கடந்த 2021 மக்களவைத் தேர்தலில் 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எப்படி இவ்வளவு கடன் வந்தது என கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரபல சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள் அவர்," போத்தீஸ் விளம்பரம், பிக்பாஸ் பல சீசன்கள், கல்கி பார்ட் 1 & 2, இந்தியன் 2 & 3. தயாரிப்பாளரா விக்ரம், அமரன் போன்ற சூப்பர் ஹிட் படங்கள், தக் லைஃப் படத்தின் வியாபாரம். எப்படி பாத்தாலும் மினிமம் 1,000 கோடியாவது கல்லா கட்டி இருப்பீங்க. அப்பறம் எப்படி கடன்ல இருக்கறதா சொல்றீங்க?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications