அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்!
சென்னை: அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?' என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக எழுந்து வரும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

7 தமிழர்கள் விடுதலை
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 7 தமிழர்களின் விடுதலைக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை எதிர்கொண்ட உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழ்நாடு அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என முக்கியமான செய்தியை கூறியது.

நழுவிய ஆளுநர்
இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு, எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்க மறுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 'எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர்தான் உண்டு' என்று நழுவி சென்று விட்டார்.

குடியரசுத் தலைவரின் அமைதி
இதையடுத்து அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஜனாதிபதி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போதைய தி.மு.க அரசும் ஆட்சிக்கு வந்தது முதல் 7 தமிழர்கள் விடுதலைக்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியும் குடியரசுத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
|
கமல்ஹாசன் உருக்கம்
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மகனின் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம் அம்மாள் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் 'மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?' என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications