சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊருக்கே ஊத்தி கொடுக்கறவங்களே அதிமுகதான்.. எல்லாம் சரி! டாஸ்மாக்கை மூட சொல்வாரா ஸ்டாலின்?.. கமல்

Google Oneindia Tamil News

சென்னை: ஊருக்கே ஊத்திக் கொடுத்தவர்கள் அதிமுக என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் ஆட்சியில் இருக்கும்போதே முதல்வர் கைதாகும் வரலாறை ஏற்படுத்தியுள்ள கட்சி அதிமுக. இரட்டை இலை என்று எம்.ஜி.ஆர் காட்டியது, ஏதோ 2 பேருக்கு இலை போட்டு சாப்பிட என நினைத்துக் கொண்டார்கள் போலும்.

டாஸ்மாக்

டாஸ்மாக்

நான் சொல்வதையெல்லாம் முதல்வர் செய்கிறார் என மு.க.ஸ்டாலின் மகிழ்கிறார். சரி, டாஸ்மாக் மூட வேண்டும் என கூறுங்களேன் பார்ப்போம். கூவத்தூரில் இவர்தான் அவருக்கு ஊத்தி கொடுத்தார். அவர்தான் இவருக்கு ஊத்தி கொடுத்தார் என சர்ச்சை வந்தது.

300 கோடி ரூபாய்

300 கோடி ரூபாய்

ஆனால் ஊருக்கே ஊத்திக் கொடுத்தவர்கள் இவர்கள். தி.மு.க, அ.தி.மு.கவும் ஒரே விஷயத்தை தான் செய்கிறார்கள். இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. செய்வீர்களா என கேட்கவில்லை. செஞ்சுருங்க என கூறுகிறேன். நமக்கு நேரம் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மூன்று ஆண்டுகள் முன் கூறினார்கள்.

அதிர்வலைகள்

அதிர்வலைகள்

பரவாயில்லை என்று அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். மார்ச் 7ம் தேதி நடைபெறும் மாநாடு தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பாரா என்ற விவரம் தெரியவில்லை.

தினகரன் மீது சிவி சண்முகம் விமர்சனம்

தினகரன் மீது சிவி சண்முகம் விமர்சனம்

சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆன போது தினகரன், "சிவி சண்முகம் எது பேசினாலும் தெளிவாக பேச வேண்டும்" என்றார். அதற்கு சிவி சண்முகமோ ஆமா இவருதான் ஊத்திக் கொடுத்தாரு. கூவத்தூரில் ஊத்திக் கொடுத்தாரே அதுமாதிரி என கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan criticises about ADMK for not closure of Tasmac.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X