சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: "பெண்களால்" மநீமவுக்கு வந்த சிக்கல்.. புழுங்கும் நிர்வாகிகள்.. என்னாச்சு கமல் கட்சியில்?

மக்கள் நீதி மய்யத்தில் புது சிக்கல் ஒன்று மீண்டும் எழுந்துள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தொடர்பான ஒரு பரிதாபமான செய்தி தமிழக அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. எனினும், அதனை விடாமுயற்சியாலும், சமயோஜித புத்தியாலும் வெல்ல கமல் ஆயத்தமாகி உள்ளார்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன், சூட்டோடு சூடாக பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற 2 பொதுத்தேர்தல்களை துணிச்சலாக சந்தித்தார்..

இதில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? கமல் கேள்வி தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? கமல் கேள்வி

படுதோல்வி

படுதோல்வி

இந்த கூட்டணியில் சமக, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம்பெற்றிருந்தன.. ஆனால், 2 தேர்தல்களிலுமே மய்யம் படுதோல்வியை தழுவியது.. இப்படிப்பட்ட சூழலில்தான், 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக போட்டியிட்டது... பல இடங்களில் மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் போட்டியிடுவதற்கு கூட ஆட்கள் கிடைக்காத நிலையில் குறைவான இடங்களிலேயே மக்கள் நீதி மய்யம் அப்போது களம் இறங்கியது...

தேர்தல்

தேர்தல்

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலைப்போலவே, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.. அதுமட்டுமல்ல, மய்யத்துடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுமே எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை.. எனினும் நடக்க போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தன்னை முழுவீச்சில் மய்யம் தயார் செய்து வருகிறது.. அதற்காகத்தான், பல்வேறு இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலையும் ரிலீஸ் செய்தார் கமல்...

பெண்கள்

பெண்கள்

இந்நிலையில்தான் அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது... உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீத இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலையில், பெண் வேட்பாளர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பற்றாக்குறையாக இருக்கிறதாம்.. தேடித்தேடி அலைந்தும் பல வார்டுகளுக்கு பெண்கள் கிடைக்கவில்லையாம்... இதனை கமலிடம் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர் மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள்.

கமல்

கமல்

அதனை கேட்டு, அவர்களிடம் கடுப்படித்துள்ள கமல், பெண்கள் கிடைக்காத வார்டுகளில், நம் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த முயற்சிக்கலாம் என்று அட்வைஸ் செய்துள்ளாராம்.. இதே நிலைமைதான் கடந்த முறை உள்ளாட்சி தேர்தலிலும் நடந்த நிலையில், மீண்டும் அதே பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது.. எனினும் கமல் தந்த ஐடியா இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
TN Local Body Election MNM Party Female Candidates: உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீத இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலையில், பெண் வேட்பாளர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பற்றாக்குறையாக இருக்கிறதாம்.. தேடித்தேடி அலைந்தும் பல வார்டுகளுக்கு பெண்கள் கிடைக்க வில்லையாம்... இதனை கமலிடம் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர் மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X