காமராஜர் பெயர் அகற்றம்... சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட நாடார் சங்கத்தினர் - திடீர் பரபரப்பு
சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த காமராஜர் பெயர் பலகை நீக்கப்பட்டதால் தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் விமான நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்த 'சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையம்' என்கிற பெயர் பலகை அகற்றப்பட்டது.

தற்காலிகமாகவே இந்த பெயர் பலகையை அகற்றுவதாகவும் விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்னும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகையும் அவரது உருவப்படத்தையும் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் சென்னை விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் சென்னை விமானநிலைய இயக்குனர் சரத்குமார், விரைவில் காமராஜரின் பெயர் பலகையும், படத்தையும் வைப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், "எங்கள் கோரிக்கையை விமான நிலைய அதிகாரிகளும், மத்திய அரசும் நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னையில் அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துவோம்." என எச்சரித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications