விடாது துரத்தும் ‘பெரியார்’..! கண் காணாமல் போன கனல் கண்ணன்! குறி வைத்த போலீஸ்! முன் ஜாமீன் கோரி மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசியதற்காக சைபர் கிரைம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன்,"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என கூறியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தயுள்ள நிலையில், சமூகத்தில் கலவரத்தை தூண்டு வகையில் பேசிய அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 கனல் கண்ணன் சர்ச்சை

கனல் கண்ணன் சர்ச்சை

இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சைபர் குற்ற பிரிவுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதனையடுத்து கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகார் தொடர்பாக கனல் கண்ணிடம் விசாரணை நடத்த சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதி கனல் கண்ணன் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

தலைமறைவு

தலைமறைவு

அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். கனல் கண்ணனின் செல்போன் எண் மற்றும் அவரது செல்போன் ஐஎம்இஐ எண் மூலம் விசாரணை நடத்த திட்டமிட்டு நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடல் கண்ணன் இருக்கிறாரா அல்லது வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்றுள்ளாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

முன் ஜாமீன் மனு

முன் ஜாமீன் மனு

கனல் கண்ணன் வீடு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி கனல் கண்ணன் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் கனல் கண்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளாதகவும், அதில் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+