"அந்த" அரசியல்வாதி யார்?.. 35 பேரை ஏமாற்றிய பலே பெண்.. வக்கீல் உடையில்தான் செல்வாராம்.. அதிரடி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பெண் வழக்கறிஞர் கைதாகி உள்ளார்
சென்னை: அரசியல்வாதியுடன் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி, டுபாக்கூர் பெண் வக்கீல், கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி.. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெபி என்ற ஸ்டெல்லா.. 41 வயதாகிறது.. தன்னை வழக்கறிஞர் என்று சொல்லி எனக்கு அறிமுகமானார்.. வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாகவும் சொன்னார்.. மேலும் ஒரு முக்கிய அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களையும் எனக்கு காட்டினார்.

5 லட்ச ரூபாய்
இதனால், மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டுமென்றும் ஸ்டெபி சொன்னார்.. இதனை நம்பி தான் ஐந்து லட்சம் ரூபாய் நான் தந்தேன்.. ஆனால், நீண்ட காலமாகியும் பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஸ்டெபி ஏமாற்றி வருகிறார்.. அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

35 நபர்கள்
இந்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணையை துவக்கினர்.. அப்போது, கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 நபர்களை ஸ்டெபி ஏமாற்றியது தெரியவந்தது.. மேலும், ஒரு கோடியே 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணத்தை மோசடி செய்துள்ளதும் உறுதியானது.. ஆனால், அதற்குள் ஸ்டெபி தலைமறைவானார்.. எனவே, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டெபியை தீவிரமாக தேடிவந்தனர்.

பறிமுதல்
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து ஸ்டெபியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்... கைது செய்யப்பட்ட ஸ்டெபியிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இறுதியில் ஸ்டெபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்... அரசு வேலை வாங்கித் தருவதாக அரசியல் பிரமுகர்களுடன் எடுத்த போட்டோவை காண்பித்து மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூய்மை பணியாளர்கள்
ஸ்டெல்லாவின் கணவர் பெயர் ஜெகநாத்... ஸ்டெல்லாவின் நடத்தை சரியில்லாததால், 5 வருடங்களுக்கு முன்பே அவர் பிரிந்து சென்றுவிட்டாராம்.. எனவே, ஸ்டெல்லா புழுதிவாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.. அப்போது, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பலரிடம் தன்னை பிரபலமான வழக்கறிஞர் என்று சொல்லி அறிமுகமாகியுள்ளார்.. அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் வக்கீல் உடையில்தான் செல்வாராம்..

ஆசை வார்த்தை
அரசியல்வாதியிடம் தனக்கு நிறைய செல்வாக்கு இருப்பதாக சொல்லி, மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வரும் தூய்மை பணியாளர்களிடம் நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்.. அப்படித்தான், 35 பேரிடம், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது... இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications