பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரத்திற்குள் நிறுத்த வேண்டும்.. கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூர்: ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு ஊபர், ஏஎன்ஐ உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி ஷ்யாம் பிரசாத் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வாகனங்களாக பைக் டாக்சிகள் இயக்க முடியாது என்பதால் அவை சட்டவிரோதமானவை என்று கர்நாடக மாநில அரசு வாதிட்டது.
இதையடுத்து, பைக் டாக்ஸிக்கு என உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊபர் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சிகள் ஆறு வாரங்களுக்குள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். மேலும், கர்நாடக மாநில அரசை 3 மாத காலத்திற்குள் பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது.
பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் பைக் டாக்சிகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications