ஜனநாயகன் பிரச்சனைக்கு யார் காரணம்? கடைசியாக விஜய் கிட்ட வந்துட்டாங்க.. கருணாஸ்
சென்னை: அங்க தொட்டு, இங்க தொட்டு திருப்பரங்குன்றம் சாமியை தொட்டு, இப்போ நடிகர் விஜய்யை நிர்பந்திக்க பார்க்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிப்பதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கமும் நானும் இருப்போம் என்றும் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சொல்வது போலவே, முழுக்க முழுக்க திட்டமிட்டு மத்திய அரசு தன்னிடம் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு எல்லாரையும் அடிபணிய வைக்க நினைக்கிறாங்க என்று கருணாஸ் கூறியுள்ளார்.

பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்காததன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தாலும் படம் ரிலீசில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் சார்பில் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை விமர்சனம் செய்திருந்தார். அதாவது "சிபிஐ, ஈடி, ஐடி வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்" என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் கருணாசும் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு சப்பார்ட்டாக நிற்போம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கூறியதாவது:-
துரதிருஷ்டவசமானது
சினிமா துறையில் நானும் ஒரு தயாரிப்பாளராக 6 படம் பண்ணியிருக்கிறேன். ஒரு படம் தயாரிக்கும் போது முறைப்படி சென்சார் செய்து அதற்கு பிறகு தான் எல்லோருமே வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்துவாங்க.. இதுல வந்து ரொம்ப குறுகிய நேரத்தில் வெளியீட்டு தேதியை முடிவு பண்ணிட்டு அதற்கு பிறகு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது.
மாநில அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
இன்றைக்கு இருக்கக் கூடிய நிலையில், சினிமாத்துறை நலிவடைந்துக் கொண்டிருக்கின்ற சூழலில், ஒரு மிகப்பெரிய நடிகருடைய, மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு வெளியாகமால் இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கு. முழுக்க முழுக்க தணிக்கை குழு மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும்.
இதுக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் வெகுஜன மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற பொது நிறுவனங்களை எல்லாம் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, நீதித்துறை என பல விஷயங்களில் அவர்களது தலையீடு இருப்பதை நாம் வெட்ட வெளிச்சமாக பார்த்து வருகிறோம்.
விஜய்க்கு துணை நிற்போம்
அதே மாதிரி தான் எதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காக அவர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்.. தேர்ல் வருகிறது, இதுக்குள்ள அவரை அடி பணிய வைப்பதற்காக .. எதோ ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்கோ ஒன்றிய அரசு தணிக்கை குழுவை பயன்படுத்துகின்றதோ என்ற ஐயப்பாடு வெகு மக்களிடம் நிறைய இருக்கிறது. நானும் அப்படித்தான் பார்க்கின்றேன்.
விஜய்யை நிர்பந்தப்படுத்த பாக்குறாங்க
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக விஜய் படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்கும். முதல்வர் ஸ்டாலின் சொன்ன கருத்து தான் என்னுடையதும். அவர் சொல்வது போல முழுக்க முழுக்க திட்டமிட்டு மத்திய அரசு தன்னிடம் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு எல்லாரையும் அடிபணிய வைக்க நினைக்கிறாங்க..
அங்க தொட்டு, இங்க தொட்டு திருப்பரங்குன்ற சாமியை தொட்டு இப்போ விஜய்யை நிர்பந்தப் படுத்த நினைக்கிறாங்க.. இத நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும், மத ரீதியாக மக்களை பிரிவினை செய்து ஆரிய சமூக மக்கள் முன்னேற வேண்டும் என நினைத்து மத்திய அரசு திட்டமிட்டு செய்யக்கூடிய செயலாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?












Click it and Unblock the Notifications