சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் இன்னொரு ’ராமதாஸ்’! ‘ரெண்டு’ பேருக்குமே அந்த தகுதி இல்லை! தடாலடியாக பேசிய கே.சி.பழனிசாமி!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே இல்லை என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே சி பழனிச்சாமி அதிரடியாக கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான யூகங்கள் வெளியாகி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அடுத்து என்ன நடக்கும் என தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் அதிமுக நிகழ்வுகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பலரும் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிமுக தலைவரா? இல்லை சாதி சங்க தலைவரா? எதை விரும்புகிறார் ஓபிஎஸ்?.. கே.சி.பழனிசாமி கேள்வி அதிமுக தலைவரா? இல்லை சாதி சங்க தலைவரா? எதை விரும்புகிறார் ஓபிஎஸ்?.. கே.சி.பழனிசாமி கேள்வி

கே.சி.பழனிச்சாமி

கே.சி.பழனிச்சாமி

இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி சென்னை வடபழனியில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிச்சா,"அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே தகுதி இல்லை இரண்டு பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி

சென்னை வந்த பிரதமர் யாரை பார்த்தார் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் போட்டியாக உள்ளது. இருவருமே தாங்கள் இன்னொரு ராமதாஸ் ஆக வேண்டும் என முயற்சிக்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆக வேண்டும் என நினைக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் வெளிப்படையாக சாதிய அரசியலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் செய்கிறார்கள். ஆனால் அதிமுக என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாகும். எடப்பாடி பழனிச்சாமி தன்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே மறைமுகமாக உறுப்பினர் அட்டைகளை வழங்கி வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

சென்னை வந்த பிரதமர் யாரை பார்த்தார் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் போட்டியாக உள்ளது. இருவருமே தாங்கள் இன்னொரு ராமதாஸ் ஆக வேண்டும் என முயற்சிக்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆக வேண்டும் என நினைக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் வெளிப்படையாக சாதிய அரசியலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் செய்கிறார்கள். ஆனால் அதிமுக என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாகும். எடப்பாடி பழனிச்சாமி தன்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே மறைமுகமாக உறுப்பினர் அட்டைகளை வழங்கி வருகிறார்.

Recommended Video

    OPS - EPS பிரச்சனைய பாஜக தீர்த்துவைக்கலாமா? *Voxpop
    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அப்படி செய்யாமல் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து அனைத்து தொண்டர்களுக்கும் உறுப்பினர் அட்டையை வழங்க வேண்டும். அதன் பின்னர் அனைவருக்கும் பொதுவான ஒரு நபரை வைத்து தலைமை குறித்த தேர்தலை நடத்த வேண்டும். அதிமுகவில் ரவுடிகளை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் நடத்தினார்கள். தொண்டர்களை அந்த தேர்தலில் அனுமதிக்கவில்லை. ஒற்றை தலைமை தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது. " என்றார்.

    English summary
    Former executive and former parliamentarian KC Palanisamy, who has been removed from the AIADMK, has said that both Edappadi Palanisamy and O. Panneerselvam are not eligible to take over the leadership of the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X