சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதி காப்போம்.. அனைத்தையும் வெல்வோம்.. மனிதனை மிஞ்சிய சக்தி உண்டா?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவைரஸ் பீதியால் மக்கள் மனதில் ஒரு விதமான அயர்ச்சியும், சோகமும் நிலவுவது உண்மைதான்.. ஆனால் பயப்படுவதற்கு அவசியமே இல்லை. மாறாக நமக்கு இப்போது தேவை அமைதியான மனம்தான்.

ஒரு சவால்தான் இந்த வைரஸ் பரவல். இதற்கு மருந்து கூட கிடையாது. ஆனால் நம்மிடமே அருமையான மருந்து இருக்கிறது. அதுதான் தனித்திருத்தல்.. அமைதி காத்தல்.. இதை மட்டும் செய்து வந்தாலே போதும்..

மனசுக்கு எப்போதுமே அதிர்ச்சிகளை விட ஓய்வுதான் அதிகம் பிடிக்கும். மன அமைதி இப்போது மிக மிகஅவசியம். கொரோனாவையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அது மனதை அமைதியிழக்க வைத்து விடும். மாறாக மனதை திசை திருப்புங்கள். அமைதிப்படுத்துங்கள்..

 நல்ல விடுப்பு இது

நல்ல விடுப்பு இது

எந்த தலைமுறைக்கும் இப்படியொரு நீண்ட விடுமுறைக் கிடைத்ததில்லை. படிக்கும் வரை தான் கோடைக்கால விடுமுறை படித்து வேலைக்குப் போய் விட்டால் நீண்ட விடுமுறை என்பது கனவு தான். அதனால் இந்த வைரஸ் பரவலைப் பற்றியே நினைத்து வருந்தாமல் உங்கள் உறவுகளோடு நேரத்தைச் செலவிடுங்கள். மனசை ரிலாக்சா வைத்துக்கொள்ளுங்கள்.

 நல்லா விளையாடுங்க

நல்லா விளையாடுங்க

உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள். அவர்களின் சேட்டைகளைக் கண்டு மகிழுங்கள். அவர்களோடு சேர்ந்து தாயம் சதுரங்கம் கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள். உங்கள் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள். ஒரு நாள் உங்கள் துணைக்கு நீங்கள் சமைத்துக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். சின்ன சின்ன சீண்டல்கள் தீண்டல்கள் இதெல்லாம் நம் வாழ்வை இந்த நாட்களை மேலும் அழகானதாக்கும்.

 செய்தி பாருங்க

செய்தி பாருங்க

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தினமும் அறிந்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். மனதிற்கினிய பாடல்களைக் கேளுங்கள். பிடித்த சினிமாக்களை குடும்பத்தோடு சேர்ந்து பாருங்கள். பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி விளையாடிப் பாருங்கள்.

 மனம் விட்டுப் பேசலாம்

மனம் விட்டுப் பேசலாம்

மனதில் உள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி விடும்.உங்கள் கடந்த கால நண்பர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள். இந்த வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் காலமும் வரும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியை மட்டும் இழக்காதீர்கள். இந்த வைரஸ் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் தனித்திருங்கள் விழித்திருங்கள் மனஅமைதியோடு இருங்கள்.

English summary
Let us all keep the mental peace at this time of juncture of Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X