Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TVK: பெரம்பூரில் விஜய்.. அதை விடுங்க! புஸ்சி ஆனந்த் களமிறங்க போகும் தொகுதி.. அதுவும் சென்னையிலே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தவெவினர் மத்தியில் எதிர்பர்ப்பு அதிகரித்துள்ள சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் சென்னையிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற சொல்லப்படுகிறது. சென்னையின் வர்த்தக நகரம் என்று கூறப்படும் தி.நகரில் அவர் களமிறங்கலாம் என்று அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இந்த முறை இதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பை எட்டியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தொடங்கியிருக்கக் கூடிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காண்பதால் இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது.

Key TVK Leaders Likely to Contest from Chennai Constituencies in Upcoming Assembly Elections

தனித்து விடப்பட்ட தவெக

விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்க கூடிய விஷயமாக அமைந்துள்ளது. தவெகவை பொறுத்தவரை கூட்டணிக்கு கடையை விரித்து காத்திருந்த போதும் எந்த கட்சியும் சீண்டவில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் சசிகலா, விஜய் பக்கம் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் தன்னை ஊழல் கறைபடியாதவராக காட்டிக்கொள்ளும் விஜய், சசிகலாவை தன்பக்கம் சேர்த்தால், அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

234 தொகுதிகளிலும் சர்வே

இதனால், சசிகலா ஒகே சொன்னாலும் விஜய் அவரை கூட்டணியில் இணைக்க சம்மதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விஜய் ஏறக்குறைய தனித்து போட்டியிடும் சூழலே தற்போதைக்கு நிலவி வருகிறது. விருப்பமனுவை பெற்றுள்ள தவெக, வேட்பாளர் தேர்விலும் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் த.வெ.க.விற்கு மக்கள் ஆதரவு குறித்து தீவிர சர்வே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் கட்சி தலைவர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விஜய்யை பொறுத்தவரை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தவெகவினர் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.

தி நகரில் புஸ்சி ஆனந்த்

கடந்த 22- ம் தேதி பெரம்பூரில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், விஜய் அங்கு போட்டியிட வாய்ப்பு அதிகம் என்று அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். அதேபோல, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சொல்கிறார்கள் தவெகவினர்.

விஜயின் ரசிகர் மன்ற தலைவராக இருந்து அவருடன் நீண்ட காலம் பயணித்து வருபவர் புஸ்சி ஆனந்த். சென்னையில் வசித்து வரும் என்.ஆனந்த், தனது வாக்காளர் அடையாள அட்டையையும் சென்னை முகவரிக்கு மாற்றியிருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்களித்தார். சென்னைக்குள்ளேயெ ஒரு தொகுதியில் போட்டியிட்டால் கட்சி பணிகளை கவனிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால் அவர் தி.நகரில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

தி நகரில் 1,54,943 வாக்காளர்கள்

தி.நகர் தொகுதியில் மொத்தம் 1,54,943 வாக்குகள் உள்ளன. அதில் ஆண் வாக்காளர்கள் 74 ஆயிரத்து 682, பெண் வாக்காளர்கள் 80 ஆயிரத்து 228, திருநங்கைகள் 33 பேரும் உள்ளனர். தி.நகர் தொகுதியில் தற்போது ஜெ. கருணாநிதி சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக சார்பில் தி.நகர் சத்யா போட்டியிட்டு சில நூறு வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.

திமுக - அதிமுக வலுவாக உள்ள இந்த தொகுதியில் தவெக சார்பில் புஸ்சி ஆனந்த் களமிறங்கினால் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. புஸ்சி ஆனந்தை தவிர தவெக மாநில நிர்வாகிகள் பலரும் தலைநகரயே குறிவைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் தவெக உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட்:

* பெரம்பூர் - த.வெ.க. தலைவர் விஜய்,
* தி.நகர் - என். புஸ்சி ஆனந்த்
* வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜூனா
* மயிலாப்பூர் - வெங்கட்ராமன்

* எழும்பூர் - ராஜ்மோகன்
* திருவொற்றியூர் - மரியவில்சன்,
* அம்பத்தூர் - ஜி. பாலமுருகன்
* ஆலந்தூர் - இ.சி.ஆர். சரவணன்

* கொளத்தூர் - பாலாஜி,
* துறைமுகம் - அசோக் (அ) விஜயகுமார்,
* மதுரவாயல் - தினகரன்,
* வேளச்சேரி - விஷ்ணு (அ) கேத்ரீன் எழில்மலை,
* திரு.வி.க. நகர் - பல்லவி

ஆகியோர் சென்னைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+