கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல "அதை" கவனிச்சீங்களா? அதைவிடுங்க.. கோட்டைக்கு பறந்த மேட்டர்.. யார் பாருங்க
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.. இந்த கடிதத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது.. பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்: பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.. எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் பெய்த மழையால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது..
வீடியோக்கள்: பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், மறைமலை நகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால், கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டு முன்பு, மழை நீர் தேங்கி நின்றுவிட்டது.. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த இடத்தை கடந்து செல்லவே முடியவில்லை.. மிகவும் சிரமப்பட்டு, தண்ணீரில் வண்டிகளை தள்ளிக்கொண்டே வந்தனர்.. இந்த போட்டோக்களும், வீடியோவும் இணையத்திலும் வெளியாகி உள்ளது..
இப்படி ஒரு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து இதுகுறித்த நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டார்..
மழைநீர்: பஸ் ஸ்டாண்டுக்குள், 24 மணி நேரமும் குடிநீர், மின்சாரம் தடை படாமல் இருக்க வேண்டும் என்பதுடன், பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் தேங்காமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்துள்ளார்.. எனினும் நேற்றைய மழையால், தண்ணீர் அதிகம் தேங்கிவிட்டது. பருவமழை இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.. அதற்குள்ளேயா இப்படி தண்ணீர் தேங்குகிறதே, இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
கடிதம்: இதனிடையே, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்கள், 80 பஸ் பே, 151 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்பு கூடம், 22 கடைகள் உள்ளன.
இங்கு தென்தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்ளிட்ட 270 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் வார நாட்களில் 850 பேருந்துகளும், வார இறுதி, விழாக் காலங்களில் 1,450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம்: ஆனால் கிளாம்பாக்கத்திலோ 62 பஸ் பே, 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. எனவே, திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ, அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றலாம் என கேட்டுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications