"அவ்வளவு அரசியல் தெரியாதுங்க.." சிரித்தபடி கமெண்ட் செய்த உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா!
சென்னை: எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாதுங்க என தெரிவித்துள்ளார், திமுக எம்எல்ஏ உதயநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் மருமகளுமான கிருத்திகா.
Recommended Video
முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கிட்டதட்ட நேரடி அரசியலில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தமிழக மக்கள் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினின் மருமகளும், உதயநிதி மனைவியுமான, கிருத்திகாவிடமும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி துரத்த தொடங்கியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன்
உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருத்திகா உதயநிதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் நடத்தப்பட்டது. திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

உதவி பொருட்கள்
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான தையல் மிஷின்கள், ஸ்டவ் ஆகியவற்றை நாங்கள் தந்துள்ளோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உதயநிதியின் அம்மாவை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை செய்தது உதயநிதியின் முயற்சியால்தான் என்றும், அதன் பின்னர் நாங்கள் திருநங்கைகளுக்கு என்னென்ன தேவை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும், அவர்களுக்கு தேவையானது நிறைய இருக்கின்றது, அதை எப்படி செயல்படுத்துவது அவர்களிடம் எப்படி உதவியை சேர்ப்பது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு உதவி
மேலும் இப்போதுதான் ஒரு ஆரம்ப புள்ளி வைத்து இருக்கின்றோம் என்றும், இதனை அடுத்து படிப்படியாக தமிழகம் முழுவதும் திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்று கூறினார். உதயநிதியும் அதையே தான் விரும்புகிறார் என்றும், ஒவ்வொரு செயலாக செய்வதில் இது ஒரு ஆரம்ப முயற்சி என்றும் விரைவில் தமிழகம் முழுவதும் இதனை சேர்ப்போம் என்றும் கூறினார்.

அரசியல் தெரியாது
இந்த நிலையில், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அரசியலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது திமுகவின் கொள்கையாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் 'எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாது' என்று சிரித்தபடியே பதிலளித்தார். அவருடைய இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications