சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவன் எப்போ ஆடி இருக்கான்?.. கமெண்டரியில் ஏபிடியை சரமாரியாக விமர்சித்த ஸ்ரீகாந்த்.. பரபர சம்பவம்!

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் அணியின் மூத்த வீரர் ஏபிடி வில்லியர்ஸ் குறித்து கிரிக்கெட் வர்ணனையில் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

Recommended Video

    Ab de Villiers-ஐ விமர்சனம் செய்த Srikanth.. கடுப்பான ரசிகர்கள்

    நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் நாக் அவுட் போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூர் அணி ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

    அதோடு மீண்டும் ஒரு முறை கோப்பை அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று கோலி தொடங்கி மேக்ஸ்வெல் வரை பெங்களூர் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் சொதப்பியதே பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா? குறையும் பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,183 பேருக்கு கொரோனா.. 3ம் அலை வருமா?

     பெங்களூர்

    பெங்களூர்

    நேற்று இந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் மூத்த வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சரியாக ஆடாமல் சொதப்பினார். அணியின் மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில் ஏபிடி வில்லியர்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி வில்லியர்ஸ் 9 பந்துகள் பிடித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். பெங்களூர் அணியின் தோல்விக்கு இவரும் முக்கியமான காரணமாக இருந்தார்.

    தமிழில் கமென்டரி

    தமிழில் கமென்டரி

    இந்த நிலையில்தான் நேற்று தமிழில் கமென்டரி செய்து கொண்டு இருந்த கிறிஸ் ஸ்ரீகாந்த், ஏபிடி வில்லியர்சை கடுமையாக விமர்சனம் செய்தார். ஏபிடி வில்லியர்ஸ் கடைசியாக எந்த போட்டியில் முக்கியமான நேரத்தில் நன்றாக ஆடி இருக்கிறார்? ப்ளே ஆப் சுற்று போட்டிகளில் எப்போதுமே ஏபிடி வில்லியர்ஸ் நன்றாக ஆடியது கிடையாது. பெங்களூர் அணிக்கு முக்கிய போட்டியில் ஒரு முறையாவது ஏபிடி வில்லியர்ஸ் உதவி இருக்கிறாரா?

    கிறிஸ் ஸ்ரீகாந்த்

    கிறிஸ் ஸ்ரீகாந்த்

    தோனி முக்கிய போட்டியில் ஆடுகிறார். அவர் தல. அதனால்தான் தோனி கப் அடிக்கிறார். ஆனால் ஏபிடி வில்லியர்ஸ் இப்படி முக்கியமான நாக் அவுட் ஆட்டங்களில் நன்றாக ஆடி இருக்கிறாரா? அதனால்தான் பெங்களூர் கப் அடிக்கவில்லை. அவன் எப்போ ஆடி இருக்கான். தென்னாப்பிரிக்க அணிக்கு முக்கியமான கட்டத்தில் அடித்து உதவி இருக்கிறானா?

     தென்னாப்பிரிக்க அணி

    தென்னாப்பிரிக்க அணி

    தென்னாப்பிரிக்க அணி நாக் அவுட் ஆட்டங்களில் கஷ்டப்பட்ட போதெல்லாம் ஏபிடி வில்லியர்ஸ் எப்போதாவது அடித்து இருக்கிறானா சொல்லுங்கள் டியர் வியூவர்ஸ்.. என்று ஏபிடி வில்லியர்ஸை கடுமையாக விமர்சனம் செய்து கிரிஸ் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். அவரை மட்டுமே நம்பி இருப்பது பெங்களூர் அணிக்கு உதவாது என்று விமர்சனம் செய்தார்.

    வாடா போடா

    வாடா போடா

    பொதுவாக வீரர்களை வாடா போடா என்று அழைப்பது ஸ்ரீகாந்த் வழக்கம். அதேபோல்தான் நேற்றும் அவர் ஏபிடி வில்லியர்சை அவன் சரியா ஆட மாட்டான்.. அவன் எப்போது கடைசியாக நாக் அவுட் போட்டியில் அடித்தான் என்று விமர்சனம் செய்தார். ஏபிடி குறித்து ஸ்ரீகாந்த் இப்படி பேசியதை பலரும் இணையத்தில் எதிர்த்து உள்ளனர்.

    ஏபிடி வில்லியர்ஸ்

    ஏபிடி வில்லியர்ஸ்

    ஏபிடி வில்லியர்ஸ் முக்கியமான வீரர். அவர் பல போட்டிகளில் பெங்களூர் அணியை தனி ஆளாக வெல்ல வைத்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரை பற்றி ஏன் தரக்குறைவாக பேச வேண்டும். அவரை விமர்சனம் செய்வது தவறு கிடையாது. ஆனால் இப்படி கடுமையான வார்த்தைகளால் அவரை தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது என்று ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

    English summary
    KKR vs RCB: Chris Srikanth comment on AB De Villiers goes viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X