சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷவர்மா என்றால் என்ன?.. எந்த நாட்டிலிருந்து வந்தது?.. ஷவர்மாவால் இறப்பு நேரிட்டது எப்படி? #shawarma

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் விரும்பி உட்கொள்ளும் ஷவர்மா எனும் உணவு எங்கிருந்து வந்தது தெரியுமா?

Recommended Video

    கெட்டுப்போன Shawarma உயிரைக்கொல்வது எப்படி? | Shawarma Food Poisoning | Oneindia Tamil

    பானி பூரி, வடை, போண்டா, பஜ்ஜி, சூப், சிக்கன் பக்கோடா, ஆட்டுக்கால் சூப், பீட்சா, பர்கர் என மக்கள் மாலை நேரங்களில் ஸ்னாக்காக சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஷவர்மா எனும் புதுவிதமான ஸ்னாக்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமானது.

    இந்த ஷவர்மா என்றால் என்ன என்பதை பார்ப்போம். இது லெபனான் நாட்டிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. இவை 15 ஆவது நூற்றாண்டு காலத்து உணவு என்றும் சொல்லப்படுகிறது.

    ஷவர்மா சாப்பிட பயமா? வாந்தி, பேதி வந்துவிட்டால் உடனே என்ன செய்யனும்? டாக்டர் பரூக் அப்துல்லா டிப்ஸ்ஷவர்மா சாப்பிட பயமா? வாந்தி, பேதி வந்துவிட்டால் உடனே என்ன செய்யனும்? டாக்டர் பரூக் அப்துல்லா டிப்ஸ்

    அரபிக் சொல்

    அரபிக் சொல்

    ஷவர்மா எனும் அரபிக் சொல் சேவிர்மே (Sevirme) எனும் துருக்கி மொழியில் இருந்து வந்தது. ஷவர்மா என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமாகும். லெபனானிலிருந்து சவுதி அரேபியா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் ஷவர்மாவை அறிமுகப்படுத்தினார்கள்.

    ஐரோப்பிய நாடுகள்

    ஐரோப்பிய நாடுகள்

    சவுதியிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஷவர்மா இடம் பெயர்ந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் மெக்சிக்கோவில் லெபனான் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் இந்த ஷவர்மா கனடா, ஒட்டாவா, மான்ட்ரீல் ஆகிய பகுதிகளில் பிரபல துரித உணவாகியுள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன்னர்

    20 ஆண்டுகளுக்கு முன்னர்

    20 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவின் மலப்புரத்திற்கு வந்தது. மொய்தீன் குட்டி ஹாஜி என்பவர் ஷவர்மாவை ரூ 15 க்கு விற்பனை செய்து வந்தார். ஷவர்மாவில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சியை வைத்து செய்வர். அதில் சில மசாலாவை போட்டு சப்பாத்தியில் வைத்து சாஸ் ஊற்றி சுற்றி தருவர். இதில் முட்டை கோஸ், கேரட், தக்காளி உள்ளிட்ட காய்களும் இருக்கும்.

     இறைச்சி

    இறைச்சி

    எந்த இறைச்சியை வைப்பார்கள் என்பது அந்தந்த நாட்டில் கிடைப்பதை பொருத்ததாகும். லெபனானில் ஆட்டிறைச்சி சர்வ சாதாரணமாக கிடைக்கும் என்பதால் ஷவர்மாவில் ஆட்டிறைச்சியை வைத்தார்கள். சவுதியில் மாட்டிறைச்சி, மெக்சிக்கோவில் சிக்கனை வைத்து கொடுத்தால் மக்கள் விரும்பி உண்டார்கள். கேரளாவில் சிக்கனை வைத்து செய்யப்படும் ஷவர்மாவை மக்கள் விரும்புகிறார்கள்.

     ஷவர்மாவில் மாமிசம்

    ஷவர்மாவில் மாமிசம்

    ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மாமிசம் குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்படுகிறது. இதனால் அந்த இறைச்சி சரியாக வேகாமல் கிளாஸ்ட்ரிடியம் எனும் பேக்டீரியாவை இறைச்சியில் உருவாக்குகிறது. இது போட்டுலினம் டாக்ஸினாக மாறுகிறது. ஆயினும் அதிக வெப்பநிலையில் அந்த பாக்டீரியா உயிருடன் இருக்காது. எனவே ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழப்பு என்பது அலட்சியமாக சமைத்ததே காரணம் என்கிறார்கள்.

    English summary
    Do you know the history and origin of Shawarma?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X