அதிமுகவில் திடீர் பூகம்பம்.. பின்னணியில் கொடநாடு வழக்கு? எடப்பாடி பழனிசாமி அவசரத்திற்கு காரணம் என்ன?
சென்னை : எல்லாம் சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கிளப்பி விட்டதற்குப் பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையேயான மோதல் போக்கு என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. அவ்வப்போது விவகாரம் பெரிதாகும்போது இருவரும் தமது ஆதரவாளர்களை சைலண்ட் ஆக்குவார்கள்.
ஆனால், இந்த முறை, எடப்பாடி பழனிசாமியே திட்டமிட்டு தான் ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என தனது ஆதரவாளர்களை கிளப்பி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பனிப்போர்
அதிமுகவின் இரட்டைத் தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே இருவருக்கும் இடையே ஜெயலலிதா மறைவு தொடங்கி பனிப்போர் இருந்து வருவது உண்மைதான். ஆனால், தொண்டர்களின் விருப்பம் காரணமாகவும், கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றுவதற்காகவும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியையும் ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கினார் ஈபிஎஸ்.

வேட்பாளர் தேர்வில்
இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது கட்சி விவகாரங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும் வாடிக்கைதான். வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் இது கொஞ்சம் உச்சமடைவதும் சகஜம். அப்படித்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்தது.

என்றைக்கும் இடைஞ்சல்தான்
ஒருகட்டத்தில், டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, அவரையே வேட்பாளர் யார் என்று சொல்லச் சொல்லுங்கள், பேசி ஆலோசிப்பதற்கு எல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு வேறு வேலை இருக்கிறது எனச் சொல்லிவிட்டார். அப்போதே, தனக்கு எவ்வளவுதான் கட்சியில் ஆதரவு இருந்தாலும் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பது தனக்கு என்றைக்குமே குடைச்சல் தான் என்பதை தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

உச்சபட்ச அதிகாரம்
இந்நிலையில்தான், வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தான் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தை தனது ஆதரவாளர்களிடம் கூறி, அதுகுறித்து குரல் எழுப்புமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு 'ஒற்றைத் தலைமை' விவாதம் புயல் போல கிளம்பி கடந்த சில நாட்களாக அதிமுகவே பரபரப்பில் இருப்பதைப் பார்த்து வருகிறோம்.

இன்னொரு காரணம்
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி திடீரென இப்போது இந்த முடிவுக்கு வந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று கிசுகிசுக்கிறார்கள் இலைக்கட்சியினர். கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு, தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள், அதிமுகவை கைப்பற்ற சசிகலா எடுத்து வரும் முயற்சி ஆகியவையே எடப்பாடி பழனிசாமியின் அவசரத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கொடநாடு வழக்கு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இன்னும் விலகாமல் இருந்து வருகிறது. கொடநாடு வழக்கில் தனக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் ஓ.பி.எஸ் எடுத்துக்கொள்வார் என்று அஞ்சியே, அதற்கு முன்பாக அனைத்து அதிகாரங்களையும் தனது கைக்குக் கொண்டு வருவதற்காக இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கிளப்பி இருக்கலாம் என்கிறார்கள். இது உண்மையா என்பது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெளிச்சம்.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications