சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கொங்குநாடு".. கொளுத்திப்போட்டது யாரு.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசு..!

Google Oneindia Tamil News

சென்னை: கொங்கு நாடு தனிமாநிலம் என்று இன்று காலை செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது . ஆனால் அதையே சாக்காக வைத்து மாநில பிரிவினை கோரிக்கைகளை சிலர் எழுப்பி உள்ளனர்.

இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம் ஆகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கோரிக்கையும் எழுந்துள்ளது.

"மத்திய அரசை" "ஒன்றிய அரசு" (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை " கொங்கு நாடு " என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

 பிரபல நாளிதழ்

பிரபல நாளிதழ்

"மத்திய அரசை" "ஒன்றிய அரசு" (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை " கொங்கு நாடு " என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை).

கொங்கு நாடு

கொங்கு நாடு

மேலும் தமிழக சட்டசபையில், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை களங்கப்படுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பிராந்தியத்தைப் பிரித்து அதை புதுச்சேரி போல தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிமாநில கோரிக்கை

தனிமாநில கோரிக்கை

மறுபக்கம் ஒரு குரூப் "வாடகை சைக்கிளை" எடுத்துக் கொண்டு "கொங்குநாட்டுக்கு" ஆதரவாக கிளம்பி விட்டது. இன்று காலை முதலே கொங்கு நாடு என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தாக்குவதற்காகவே கொங்கு புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பித்த சிலர், இப்போது கொங்கு மண்டலத்தை தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

ஒற்றுமை அவசியம்

ஒற்றுமை அவசியம்

தமிழ்நாடு ஒற்றுமையாக இருப்பதுதான் பலம். துரதிஷ்டவசமாக அதை பிரிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இது போன்ற பிரிவினை கோரிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
The news published in a newspaper this morning that the Kongu country is a separate state is completely false. But some have raised demands for state secession on the same pretext.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X