கேபிஒய் பாலாவின் 1 கிரவுண்ட் நிலம்.. அசைன்மென்ட் தந்தது யார்? மன்சூர் அலிகான், லாரன்ஸ் பற்றி பிரபலம்
சென்னை: கேபிஒய் பாலா வெளியிட்டிருந்த வீடியோவில், "என்னை சர்வதேச கைக்கூலி என்று சொல்வது எனக்கே அதிர்ச்சி.. நான் தினக்கூலிங்க.. யாருக்காவது வண்டி கொடுத்தால், அதன் பெயரில் மாறும்.. அதனால் தான் வண்டி நம்பரை மறைக்கிறேன். நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், சினிமா வருமானத்தில் உதவி செய்கிறேன். நான் சின்ன கிளினிக்தான் கட்டுகிறேன். அதுக்கான நிலத்தை முன்பே வாங்கி வைத்திருந்தேன்" என்றெல்லாம் விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Reflect Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், கேபிஒய் பாலா, பெரிய சிந்தனையாளரோ, புரட்சியாளரோ, சமூக மாற்றத்தை செய்யக்கூடியவரோ அல்ல.. பாலாவுக்காக சில மூத்த பத்திரிகையாளர்கள் கவலைப்பட தேவையில்லை..

நேபாளத்தில்கூட புரட்சியை உண்டுபண்ணி விடுவார்கள் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் கவலைப்படுகிறார்.. அப்படி பதற்றப்படக்கூடிய அளவில் இங்கு எதுவுமே நடக்கவில்லை.. ஒருவேளை அந்த மூத்த பத்திரிகையாளருக்கு ஆர்எஸ்எஸ், திமுகவிலிருந்து ஏதாவது அசைன்மென்ட் தந்திருக்கலாம்.. அதனால்தான் பாலாவை நேபாள புரட்சியாளராக சந்தேகப்படுகிறார்.
ஒரு கிரவுண்ட் காலி நிலம்
இப்படி முன் வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்து பாலா வெளியே வரவேண்டுமானால், பாலாவிடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.. ஒரு கிரவுண்டு இடத்தை பாலாவுக்கு இலவசமாக தந்தார்களா? ஆம்புலன்ஸ் நம்பருக்கு பதில் கார் நம்பர் எப்படி வந்தது? எப்போதுமே சிறு துரும்புகூட ஒரு மனிதனின் பொதுவாழ்க்கையை களங்கப்படுத்திவிடும்..
கேரளாவில் வேடன், சனாதனத்தை அடித்து துவம்சம் செய்தார்கள்.. உடனே சனாதனவாதிகள் சும்மா இருக்க மாட்டார்கள்.. பாலியல் புகார்களில் சிக்கி இன்று வேடன் அங்கு காணாமல் போய்விட்டார்..
பாலாவுக்கு எதிராக அசைன்மென்ட் தந்தது யார்
எனவே பாலா மீது இப்போது கடுமையான விமர்சனங்கள் வைப்பதால் 2 வகையான சந்தேகங்கள் வருகின்றன.. சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு ஏதாவது கட்சியிலிருந்து அசைன்மென்ட் தரப்பட்டதா? என்று தெரியவில்லை.. ஏனென்றால் பயங்கரமாக கற்பனை செய்கிறார்.. இது சனாதனவாதிகளின் மூளையாகும்.. இந்த மூளைக்கு அந்த பத்திரிகையாளர் பலிகடா ஆகிவிட்டாரா? அல்லது பத்திரிகையாளர் சொல்கின்ற குற்றச்சாட்டுக்கு பாலா பலியாகிவிட்டாரா? எனவே பாலாவும் இங்கு தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
இப்படியொரு குற்றச்சாட்டு பாலா மீது வைக்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த குற்றச்சாட்டுக்கு என்ன காரணம்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எங்கிருந்து யார்? இந்த குற்றச்சாட்டை பாலா மீது உருவாக்கினார்கள்? சிஐஏ விலைபேசி எடுக்கக்கூடிய அளவுக்கு பாலா மிகப்பெரிய புரட்சியை இங்கு செய்துவிட்டாரா? பாலா மூலம் இந்தியாவில் அரசியல் மாற்றம் வந்துவிட்டதா?
மன்சூரலிகான் செய்த புரட்சி
அதேபோல ராகவா லாரன்ஸ் மீது சொல்லும் குற்றச்சாட்டும் பொய்யானவை.. சினிமாவை பொறுத்தவரைக்கும், சனாதனவாதிகள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.. ஒரு தமிழனோ, தமிழச்சியோ, ஒரு நடிகராகவோ, நடிகையாகவோ, பாடகராகவோ இங்கு வந்துவிட முடியாது என்ற குற்றச்சாட்டு இங்கு நீண்ட காலமாகவே உள்ளது.
யாராவது முற்போக்குத்தனம் பேசி வந்தால், அவர்களை விலைபேசி வைத்து கொள்வார்கள்..
ஆனால், இந்த சனாதனத்தை உடைத்தெறிந்த முதல் நபர் மன்சூரலிகான்.. அன்று தன்னுடைய படத்துக்கு பூஜை போட்டபோதே, வெள்ளை சேலை அணிந்த பெண்களை குறுக்கே ஓடவிடுவது, பூனையை குறுக்கே ஓடவிடுவது போன்றவற்றை செய்தார்,..
லாரன்ஸ் மீது பொய்கள்
இவைகளையெல்லாம் அவர் கொள்கை ரீதியாக செய்திருந்தால், கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போல இன்று மாறியிருப்பார்.. ஆனால், பாலியல் வழக்கில் சிறை சென்றார்.. இந்து மத சடங்குகளை சீண்டியதால், பொறி வைத்து பிடிக்கப்பட்ட மன்சூரலிகான், ஒரு வருட காலம் சிறையில் இருந்தார்..
அதேபோல லாரன்ஸ் ஒரு அறக்கட்டளையை வைத்து உதவிகளை செய்து வருகிறார்.. லாரன்ஸ் செய்யும் உதவியால் பலனடைந்தவர்களும் ஏராளம்.. இந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.. இதனால் ஒருகட்டத்தில் பயந்துவிட்டார்.. அதற்கு பின்னாலுள்ள அரசியலை பார்த்து, அந்த பணமே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. அறக்கட்டளையையும் நிறுத்திவிட்டார்.
வெளிப்படைத்தன்மை வேண்டும்
எனவே பாலா வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.. பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்..நல்ல பெயர் கிடைத்துவரும்போது, தன் மீதான நேர்மையையும் நிரூபிக்க வேண்டும்.. அப்படி நிரூபிக்காமல் போனதால்தான், நேபாள புரட்சிக்கு தலைமை தாங்க கூடிய அளவுக்கு எதிரிலுள்ளவர்கள் சிந்திக்கிறார்கள்.. பங்களாதேஷ் புரட்சியை கேபிஒய் பாலா நடத்திவிடுவார் என்று எதிரிகள் பயப்படுகிறார்கள்..
இதையெல்லாம் நிரூபிக்காவிட்டால், லாரன்ஸ் வீட்டுக்கு பக்கத்திலேயே பண்ணை வீட்டை வாங்கி, கேபிஒய் பாலா வாழ்வதை தவிர வேறு வழியில்லை என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications