ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி வதந்தி ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சிதான்- குஷ்பு அந்தர் பல்டி
சென்னை: ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி வதந்தி ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சிதான் என குஷ்பு ஒரே போடு போட்டார்.
காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளுக்கிடையேயான பிரச்சினையால் அதிருப்தியில் இருந்த குஷ்பு திடீரென நேற்று முன் தினம் டெல்லி சென்றார். இதையடுத்து அவர் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்றைய தினம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பாஜக மூத்த நிர்வாகியை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.

கமலாலயம்
இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த குஷ்புவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தான் கமலாலயத்தில் பதில் அளிப்பேன் என்றார் குஷ்பு.

நீட் தேர்வு
இதையடுத்து சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேளாண் மசோதாவை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அது போல் நீட் தேர்வையும் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான்.

விசுவாசம்
ஆனால் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை பாஜக நிறைவேற்றினால் உடனே அதை இவர்கள் எதிர்க்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. இருக்கும் இடத்தில் நான் விசுவாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அது போல்தான் திமுகவிலும் சரி காங்கிரஸிலும் சரி விசுவாசமாகவே இருந்தேன்.

ட்வீட்
ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி தவறான ட்வீட் போட்டதே காங்கிரஸ் கட்சியினர்தான். பாஜகவில் நான் சேருவதற்கு சுந்தர் சி காரணமல்ல என்றார். இதற்கு முன்னர் ரூ 2 வாங்கிக் கொண்டு என்னை பற்றி தவறாக ட்வீட் போடுகிறார்கள் என பாஜகவை விமர்சித்த அதே வாயால் இன்று காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications