தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 100 நாட்கள் கொண்டாட்டம் தேவையா?.. மத்திய அமைச்சர் எல் முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள், ஆனால் நிறைவேற்றமாட்டர்கள் என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என திமுகவை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிப் பெற்றதற்கு காரமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு கட்சி சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களை ஊக்குவிக்கும்விதமாக கட்சி சார்பில் கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

முன்னாள் மாநில தலைவர்

முன்னாள் மாநில தலைவர்

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசாக வழங்கினார்.

தமிழக தேர்தல்

தமிழக தேர்தல்

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சி.கே.சரஸ்வதி (மொட்டக்குறச்சி) ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து கடந்த தேர்தலில் வெற்றிப்பெற செய்த நான்கு மாவட்ட தலைவர்களான 1.மகாராஜன் - திருநெல்வேலி,
2. தர்மராஜ் -கன்னியாகுமரி,
3. சிவசுப்பிரமணியம் -ஈரோடு,
4. நந்தக்குமார் -கோவை ஆகியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக 4 இன்னோவா கார் பரிசாக வழங்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள்

மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில் தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள். ஆனால் நிறைவேற்றமாட்டர்கள். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால் தரவில்லை.

சொன்னதை செய்வோம்

சொன்னதை செய்வோம்

ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பாஜக அப்படியில்லை சொன்னதை செய்வோம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+