140 கோடி மக்களும் ஜன.22ஆம் தேதி வீடுகளில் விளக்கு ஏற்றணும்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
சென்னை: 140 கோடி மக்களும் ஜனவரி 22ஆம் தேதி அன்று வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அயோத்தி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தருமாறு நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில் இந்தியாவின் கலாச்சார, ஆன்மிக, சமூக அடையாளமாக திகழும் என உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கோவிலில் குழந்தை ராமரின் சிலை ஜனவரி 22அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது; ''ஸ்ரீ ராம ஜோதியை ஏற்றுங்கள்..! வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.''
''இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம். ஜெய் ஸ்ரீ ராம்..!'' இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications