எல்.முருகன் விஷயத்தில் இன்னும் சஸ்பென்ஸ்.. தமிழக பாஜக தலைவரா? வானதி சீனிவாசன் சொன்ன அந்த விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகன் மீண்டும் தமிழக பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் அளித்த பதில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தையோ, தெளிவான முடிவையோ வெளிப்படுத்தவில்லை..!!

மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல். முருகன் விலகியதை தொடர்ந்து, தமிழக பாஜகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

L Murugan Tamil Nadu BJP Chief BJP Tamil Nadu

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதற்காகவே பதவியை ராஜினாமா செய்ததாக எல்.முருகன் கூறியிருந்தார்.. எனினும், அவரது பதவி விலகலுக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

எல்.முருகன் ராஜினாமா

அமைச்சர் பதவியை அவராகவே ராஜினாமா செய்தாரா, அல்லது பாஜக மேலிடத்தின் முடிவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவராக எல். முருகன் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. திமுக அரசின் நீட்சியாக தான் தமிழக வெற்றி கழக அரசை நாங்கள் பார்க்கிறோம். சுதந்திரமான ஒரு நாட்டில் விருப்பப்படி, பாடல்களும், ஊர்வலங்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்கிறது சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் எதுவும் செய்யவில்லை..

நறுக்னு சொன்ன வானதி

எல். முருகன் தமிழக பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுகிறாரா என்று கேள்வி கேட்கிறீர்கள்.. உங்கள் யூகங்களுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது..

கட்சியின் தேசிய தலைமை யாருக்கு, எந்த நேரத்தில், என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்யும்... பாஜகவில் பெரிய தலைவர்கள் மட்டுமின்றி சாதாரண தொண்டர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.. கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்வதற்கு கட்சி எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது" என்றார்.

புதிய பொறுப்பு கிடைக்குமா

ஆக, எல். முருகனுக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு வானதி சீனிவாசனின் பதிலிலும் நேரடியான விடை கிடைக்கவில்லை. தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளதால், அடுத்த மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது.

எல். முருகனுக்கு மீண்டும் மாநில தலைவர் பொறுப்பு கிடைக்குமா அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

நயினார் நாகேந்திரன்?

ஆனால், ஒரு பிரபல சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளரும, அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், எல்.முருகன் ராஜினாமா குறித்து பேசும்போது,"தமிழ்நாட்டில் பாஜகவின் சமூக நீதி அரசியல் அட்டவணை பிரிவு மக்களை சுற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. எல்.முருகன் ராஜ்ய சபா எம்பி பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார். ஒருவேளை அந்த ராஜ்ய சபா எம்பி பதவிக்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடலாம்.. அவர் மத்திய இணையமைச்சரானால்,எல்.முருகன் தமிழக அரசியலில் காலூன்றலாம்" என்று கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+