புதிய வீட்டு மனை பிரிவு! மனைவி, பிள்ளைகளின் நிலம்.. முக்கிய கோரிக்கையுடன் தமிழக அரசிடம் ஓடிய பெயிரா
சென்னை: புதிய வீட்டுமனை பிரிவு அமைப்பதற்கான இனங்களில் சரியான வழிகாட்டி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ஃபெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு வீட்டு வசதி துறைக்கு முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

கோரிக்கை: குறிப்பாக, வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, புதிய வீட்டுமனை பிரிவு அமைப்பதற்கான இனங்களில் சரியான வழிகாட்டி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமிக்கு, வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார் டாக்டர் ஹென்றி. அவர் எழுதியுள்ள கடிதத்தில் உள்ளதாவது:
"புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OSR) சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண் ROC NO.4367/2019/TCP2 தேதி: 14.08.2021 இல் ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுக்கான (OSR) திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு, நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைகள்: ஆனால், மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு அருகிலுள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை.
மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில் உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும் வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை.
புதிய வீட்டுமனை பிரிவினை: ஆகவே, பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர, மேற்கண்ட ஒரு ஹெக்டேருக்குள் புதிய வீட்டுமனை பிரிவினை அமைக்கும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கட்டுனர்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை தாங்கள் கருத்தில் கொண்டு,
ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும்,
அவகாசம்: அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயித்து, சலுகை வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறை மற்றும் சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications