Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அளவை.. வருவாய் துறையிலிருந்து நில அளவைத்துறை தனியாக பிரியுதா? என்ன காரணம்? தமிழக அரசு முடிவு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில அளவை துறையின் மாநில மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. என்ன காரணம்?

நில அளவுகள் என்பது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக மாறுபட கூடியது.. நில சர்வே எண் என்பது ஒரு நிலம் அல்லது மனைக்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான எண் ஆகும். அதிகாரிகளால் வழங்கப்படும் இந்த எண், ஒரு நிலத்தை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது.

Land Survey and Land Survey Department should be separated from revenue department

பல்வேறு நிலங்களின் பதிவேடுகள் நில சர்வே எண்களின் உதவியுடன் பராமரிக்கப்படுகின்றன... சர்வே 2 பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது... நீங்கள் ஒரு இடம் வாங்கினால், அந்த மனை, யார் பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்றெல்லாம், 30 வருடங்களுக்கு அதற்கான மூலப்பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்..

வருவாய்த்துறை: நீங்கள் வாங்க போகும் சொத்தின் இப்போதைய ஓனர் பெயரில் உள்ள பத்திரங்களைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களில் அந்தச்சொத்து யார், யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்த்து கொள்ளலாம். அதாவது வருவாய்த்துறையில், நில அளவை செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நில அளவை துறை, 160 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. நிலங்களை அளந்து எல்லைகளை வரையறுப்பது மட்டுமின்றி, நிலத்தை உட்பிரிவு செய்து புதிய பட்டா வழங்குவதில், இந்த துறை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருந்தாலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஒரு பிரிவாகவே, நில அளவை துறை இயங்கி வருகிறது.

புதிய கோரிக்கை: இந்நிலையில், வருவாய் துறையில் இருந்து, நில அளவை துறையை பிரித்து, தொழில் நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக எழுந்துள்ளது.. இந்த கோரிக்கையை நில அளவை துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது..

இதற்கு காரணம், பட்டா வழங்கல், நிலங்களை அளப்பது தொடர்பான விஷயங்களில், வருவாய் துறை அதிகாரிகளுக்கும், நில அளவை துறை அதிகாரிகளுக்கும், அடிக்கடி கள நிலையில் மோதல்கள் வந்துவிடுகிறதாம்.. அதனால்தான், நில அளவை துறையை, வருவாய் துறையில் இருந்து பிரிக்க வேண்டும் என்று கோரிவருகிறார்கள்.

நடைமுறை சிக்கல்: தமிழக நில அளவை துறை அலுவலர் சங்க மாநில மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதனால், நடைமுறை சிக்கல்களும் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தமிழக நில அளவை துறை அலுவலர் சங்கத்தின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் வலுத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+