Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டாவில் நில அளவீடு.. சென்ட், ஏக்கர், கிரவுண்டு.. ஓஹோ, வீட்டுமனை அளவுகளை இப்படிதான் கணக்கிடணுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி? நில அலகுகள் என்னென்ன? வீட்டு மனை அளவானது சதுர அடியில் இருந்தால், அதை எவ்வாறு சென்ட் அளவில் மாற்றுவது? நில அளவீடுகள் என்னென்ன? என்பதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

அந்த காலத்தில் நிலத்தின் அளவுகளை, குழி, வேலி, மா என்று பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தன.. எனினும், வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர அடி கணக்குகளிலேயே இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது.

land survey measurement land


வீட்டுமனைகள்:
அதேபோல, வீட்டு மனைகள் வாங்கும்போது, சதுர அடி, சென்ட் மற்றும் கிரவுண்டு போன்ற அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன... ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

பொதுவாக, ஒரு நிலத்தின் பரப்பளவு, நீளம் போன்றவற்றுக்கு ஏற்றார்போலவே, அந்த நிலத்தின் அளவீடுகள் இருக்கும். பெரும்பாலும், சதுரமான அமைப்பிலுள்ள ஒரு நில மனையை சென்ட், சதுர அடிகள் போன்ற அளவீடுகளில் அளக்கிறார்கள். சம மனை அளவுள்ள மனைகள் எப்படி அளக்கப்படுகின்றன? வெவ்வேறு அளவுள்ள மனையை எப்படி அளப்பது தெரியுமா?

சமமனை அளவு: மனையின் அளவுகள் 4 பக்கங்களிலும் சமமாக இருக்கும்போது, அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்கி வரும் அளவுதான் அதன் மொத்த அளவாகும். அதாவது, ஒரு மனை நீளவாக்கில் 2 பக்கமும் 50 அடிகள் இருப்பதாகவும், அகலவாக்கில் 2 பக்கங்களிலும் 25 அடிகள் இருப்பதாகவும் கொண்டால் அந்த மனையின் ஒட்டு மொத்த அளவானது 1250 சதுர அடியாகும்.

வெவ்வேறு அளவுகள்: சில சமயம், நீள்வட்ட, முக்கோண வடிவங்களில் அளவீடு செய்யும் வகையில் சிலரின் நிலங்கள் மனைகள் இருக்கும்.. இப்படி 4 பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகளை கொண்டதாக மனைகள் இருந்தால், அதன் எதிரெதிரான பக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது மனையில் நீளவாக்கில் எதிரெதிராக உள்ள 2 பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு கூட்டி வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.. பிறகு, மனையின் அகல வாக்கில் எதிரெதிராக உள்ள 2 பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ளவேண்டும். இந்த விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணையும் குறித்துக்கொள்ளவேண்டும். மேற்கண்ட முறைகளில் கிடைத்த 2 எண்ணிக்கைகளையும் பெருக்கினால் வரக்கூடிய அளவுதான் மனையின் மொத்த அளவாகும்.

சென்ட் அளவு: ஒரு சென்ட் எடுத்துக் கொண்டால், 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும். அதையே சதுர அடியில் குறிப்பிடுவதென்றால், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும்...

ஒரு மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவுதான், அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும். அதாவது, 1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்து கிடைக்கும் 3.04 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.

கிரவுண்ட்: ஒரு கிரவுண்டு என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும்.. அதனால், குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்டு அளவாகும்.. ஒரு மனையின் மொத்த சதுர அடியான 1326 என்பதை 2400 என்ற அளவால் வகுத்தால் வரக்கூடிய 0.55 என்ற விடையே, அந்த மனையின் கிரவுண்டு அளவாகும்.

சில நில அளவுகள்

1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 4356 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடி என பல விதமான அளவுகள் இருக்கின்றன.

நில அலகு (UNITS) - நில அளவீடு (MEASUREMENTS)

1 ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் என்பது 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் என்பது 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் என்பது 100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் என்பது 435.6 சதுர அடிகள்
1 சென்ட் என்பது 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் என்பது 222.96 சதுர மீட்டர் (5 ½ சென்ட்)
1 கிரவுண்ட் என்பது 2400 சதுர அடிகள்
1 மீட்டர் என்பது 3.281 அடி
1 குழி என்பது 44 சென்ட்
1 மா என்பது 100 குழி
1 காணி என்பது 132 சென்ட் (3 குழி)
1 காணி என்பது 1.32 ஏக்கர்
1 காணி என்பது 57,499 சதுர அடிகள்
1 டிசிமல் என்பது 1 ½ சென்ட் 1 அடி 12 இன்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் என்பது 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் என்பது 5280 அடி (8 பர்லாங்)
1 கிலோ மீட்டர் என்பது என்பது 1000 மீட்டர் (0.62 மைல்)
1.61 கிலோ மீட்டர் என்பது 1 மைல்
1 கிலோ மீட்டர் என்பது 3280 அடிகள்
1 பர்லாங் என்பது 660 அடிகள் (220 கெஜம்)
1 கிலோ மீட்டர் என்பது 5 பர்லாங்கள்
1 செயின் என்பது 66 அடிகள் (100 லிங்க்)
1 லிங்க் என்பது 0.66 அடி (7.92 அங்குலம்)
1 கெஜம் என்பது 3 அடி
8 பர்லாங் என்பது 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் என்பது 1076 சதுரஅடி (2.47 சென்ட்)
22 கெஜம் என்பது 1 செயின் (66 அடி)
10 செயின் என்பது 1 பர்லாங்
1 இன்ச் என்பது 2.54 செ.மீ
1 செ.மீ என்பது 0.3937 இன்ச்
1 கெஜம் என்பது 0.9144 மீட்டர்
1 மீட்டர் என்பது 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் என்பது 10.76391 சதுரஅடி
1 சதுரஅடிஎன்பது 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் என்பது 1 டவுன்ஷிப்
640 ஏக்கர் என்பது 1 சதுர மைல்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+