ஊரடங்குனாலும் “எனக்கும் பசிக்கும்ல” - விர்ரென உயர்ந்த மீன்கள் விலை, கொத்தாய் கூடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடி சந்தைக்கு ஏராளமான மக்கள் படை எடுத்தனர்.

Recommended Video

    ஊரடங்குனாலும் “எனக்கும் பசிக்கும்ல” - விர்ரென உயர்ந்த மீன்கள் விலை, கொத்தாய் கூடிய மக்கள்

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு நோய் தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் விட தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற சேவைகளுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

    பால், பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இறைச்சிக்கடைகளை மூட வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    காசிமேடு மீன் சந்தை

    காசிமேடு மீன் சந்தை

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலியாக நாளை இறைச்சி மார்க்கெட்கள், மீன் சந்தை மூடப்படும் என்பதால் இன்று காலையே பொதுமக்கள் காசிமேடு மீன்பிடி சந்தைக்கு படையெடுத்தனர். சமூக இடைவெளியின்றியும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

    கட்டுப்பாடுகளை மீறிய மக்கள்

    கட்டுப்பாடுகளை மீறிய மக்கள்

    நோய் தொற்று பரவல் காரணமாக காசிமேடு மீன்பிடி சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்கனவே மீன்வளத்துறை சார்பில், மாநகராட்சி சார்பிலும் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசங்களை அணியவும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இருந்தபோதிலும் இரவு ஊரடங்கு எதிரொலியாக 5 மணி முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்

    மீன்கள் விலை உயர்வு

    மீன்கள் விலை உயர்வு

    குறைந்த அளவிலான விசைப்படகு மட்டும் கடலுக்கு சென்று வந்ததால் மீன்களின் வரத்து கணிசமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையை சற்று உயர்ந்து காணப்படுகிறது. இருந்தபோதிலும் மீன்களின் வரத்து சங்கரா, கொடுவா, பாரை, வவ்வால் , உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்

    மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்

    மீன்களை வாங்குவதில் அதிகம் நாட்டம் செலுத்திய மீனவர்களும் அசைவ பிரியர்களும் சமூக இடைவெளியை மறந்து மீன்களை வாங்கி சென்றனர். ஏற்கனவே கடந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து நோய் தொற்று அதிக அளவில் பரவியதால் இம்முறை மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு பொது மக்கள் இதுபோன்ற ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+