காந்தி ஜெயந்தி: டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை.. சென்னையில் ஆளுநர், முதல்வர் அஞ்சலி!
சென்னை : இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் 'காந்தி ஜெயந்தி' என இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தி அன்று டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

பிரதமர் மோடி
மகாத்மா காந்தியின் 154வது ஜெயந்தி விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை செலுத்தினர்.

சோனியா காந்தி
காந்தி ஜெயந்தியையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சென்னையில் முதல்வர், ஆளுநர் மரியாதை
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் அஞ்சலி
மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகள், நினைவிடங்களில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள், மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications