உங்க வீட்டில் குழந்தைகள் இருக்காங்களா? கவனம் மக்களே! மழைக் காலத்தில் கடைபிடிக்க வேண்டியது என்ன?
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டியது. அவ்வப்போது வெயில் தலை காட்டினாலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டித்தீர்த்தது.
இது ஒருபுறம் இருக்க மழையால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீர் நிலைகளை ஆபத்தான முறையில் கடப்பது, நீரில் மூழ்கி உயிரிழப்பது உள்ளிட்ட நிகழ்வுகளும், மின்சாரம், இடி தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

மக்களே கவனம்
இந்நிலையில் நீர்நிலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் குறித்து பார்க்கலாம்.. தற்போது அணைகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆற்றின் கரைகளில் உள்ள பொதுமக்கள் ஆற்றின் அருகில் செல்லவோ, ஆற்றை கடக்க வேண்டாம். ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் வருவதால் ஆற்றுப்பகுதி அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நீர்நிலைகளுக்கு செல்லக் கூடாது
குளங்கள் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் யாரும் குளங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும் அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அணைகள்,ஆறு, ஏரி குளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் வெள்ள நீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். இடி மின்னல் ஏற்படும்போது டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

வெளியே செல்லக் கூடாது
குறிப்பாக மழை நேரத்தில் கூடுமானவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் இடி மின்னல் போன்றவை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கைதான். எனவே இடி மின்னல் வெட்டும் சமயங்களில் திறந்த வெளி பகுதிகளில் நிற்கவோ அல்லது மரங்களுக்கு அடியில் நிற்கவோ கூடாது. குறிப்பாக குடை போன்ற இரும்பு பொருட்களுடன் நடப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை திறந்த வெளியில் மாட்டிக் கொண்டால் தரையோடு அமர்ந்து கொள்ளலாம். இல்லையேல் கட்டிடப் பகுதிகளுக்கு விரைந்து செல்வது நல்லது.

முன்னெச்சரிக்கை
உங்கள் வீட்டின் அருகிலேயே அல்லது பிற பகுதிகளில் இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதே போல முறிந்து விடும் நிலையில் உள்ள மரங்கள். மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். சாலைகளில் நடக்கும் போது மின் கம்பங்கள் மின்கம்பிகள் உள்ளிட்டவற்றை தொடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications