துணிவு காட்டும் வாரிசு! தயவுசெஞ்சு வேணாம் ப்ளீஸ்.. விஜய் அஜித் வீட்டுக்கே பறந்த கடிதம்! என்னாச்சு?
சென்னை : நடிகர்கள் விஜய் அஜித்குமார் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டியையொட்டி வெளியாக இருக்கும் நிலையில், படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பாக இருவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பால் முகவர் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," மரியாதைக்குரிய முன்னணி திரைப்பட கலைஞர் அஜீத் மற்றும் விஜய் அவர்களுக்கு வணக்கம். தங்களது சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ள "துணிவு" "வாரிசு" திரைப்படம் தமிழர் திருநாளாம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி.
இத்தருணத்தில் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை மீண்டும் தங்களின் முன் வைக்க கடமைப்பட்டுள்ளோம், இம்முறையாவது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயலாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

பாலாபிஷேகம்
ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு, மூன்று முறையோ திரையரங்குகளில் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் காலங்களில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கூட அது தங்களின் ரசிகர்களை மட்டுமின்றி, திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருகை தரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பலனிக்கக் கூடியதாக அமைய வேண்டும். அதற்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு வளாகங்களில் தங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் தங்களுக்கு வைக்கப்படும் பல அடி உயர கட்அவுட்டுகள் மீதேறி, அந்த உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்தும் வகையில் தங்களின் ரசிகர்களுக்கான அறிவிப்புகள் வெளியிட வேண்டும், இதனால் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் பால் வீணடிப்பது தடுக்கப்படுவதுடன் அதுபோன்ற காலகட்டங்களில் பாலினை திருட்டு கொடுத்து பால் முகவர்களாகிய எங்களது வாழ்வாதார இழப்பானது காப்பாற்றப்படும்.

விழிப்புணர்வு முகாம்.
தங்களது திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் காலங்கட்டங்களில் வெறும் கட்அவுட்டுகள் வைப்பது, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது என்பதை கடந்து திரைப்பட வெளியீட்டு கொண்டாடங்களை பொதுமக்கள் மத்தியில் குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் குறிப்பாக மது, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிராகவும், உடல்உறுப்புதானம், தலைக்கவசம், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினையும், அரசு மருத்துவமனை மற்றும் தன்னார்வ ரத்தவங்கி அமைப்புகளோடு இணைந்து ரத்ததான முகாம்களையும் அனைத்து திரையரங்க வளாகங்களிலும் நடத்த தங்களின் ரசிகர்களுக்கு கட்டளையிட வேண்டும். இது அடுத்த தலைமுறைக்கு நல்ல விசயங்களை கொண்டு போய் சேர்க்கவும், இளம் தலைமுறையினர் தடம் மாறி செல்வதையும் தடுக்க உதவி செய்வதாக அமையும்.

முன்னணி நடிகர்கள்
ஏனெனில் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்கள் திரையில் பேசும் வசனங்கள் வேதவாக்காகவும், திரையில் நிழலாக வரும் தங்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் நிஜ வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வேதமந்திரமாகவும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு தெரிகிறது. அதனால் தான் இளம் தலைமுறையினர் தடம் மாறி சென்று விடக்கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் காலங்களில் எல்லாம் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

ரசிகர்கள்
குறிப்பாக தமிழகம் முழுவதும் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் திரையரங்க வளாகங்களில் நூறடிக்கும் உயரமான கட்அவுட்டுகள் வைப்பதும், பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், குடும்பம் என தங்களின் எதிர்காலம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் பல அடி உயர கட்அவுட்டுகளின் மீதேறி "கரணம் தப்பினால் மரணம்" என்கிற நிலையில் அந்த உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, கட்அவுட் உயரத்திற்கு மாலை அணிவித்து, மேலிருந்து தலைகீழாக கற்பூர ஆரத்தி எடுப்பது என தங்களின் உயிரையே பணயம் வைத்து கொண்டாடுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு
கடந்த காலங்களில் ரசிகர்கள் அப்படி உயிரைப் பணயம் வைத்து கொண்டாடிய சமயங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களின் நூறடிக்கும் உயரமான கட்அவுட்டுகளின் மேலிருந்து கீழே விழுந்து பல ரசிகர்கள் உயிரிழந்துள்ளதோடு, கை, கால்கள், மண்டை உடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதும், அவ்வாறு கட்அவுட் வைத்து கொண்டாடுவதில் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டையிட்டு சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கிய நிகழ்வுகளும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பு கட்டளை
ரசிகர்கள் என்பவர்கள் அணுகுண்டுக்கு இணையான சக்தி மிக்கவர்கள் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். அணுகுண்டை உலக நாடுகள் சில அழிவிற்கு பயன்படுத்தும் வேளையில் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தும் நாடுகளும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் ரசிகர்கள் எனும் மாபெரும் அணுகுண்டு சக்தியை கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து, பாலாபிஷேகம் செய்கிற வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக இல்லாமல் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வைக்கும் அளப்பரிய சக்தியாக மாற்றிட செய்வதும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வதும் தங்களின் கரத்திலும், குரலிலும் தான் இருக்கிறது என்பதால் தற்போது திரைப்படம் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதனை செயல்படுத்த ரசிகர்களுக்கு உடனடியாக அன்பு கட்டளையிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என கூறியுள்ளார்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications