எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஜாக்பாட் 33000 கோடி லாபத்தால் கூடுதல் போனஸ்.. பீமா சகி யோஜனா அசத்தல்
சென்னை: எல்.ஐ.சி. நிறுவனத்தின், மொத்த பிரீமிய வருமானம், கடந்த ஒன்பது மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது அதற்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
எல்.ஐ.சி என்பது இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம்.. இதில் பல்வேறு விதமான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.. ஒவ்வொரு காப்பீட்டு திட்டத்துக்கும் ஒவ்வொரு மாதம் அல்லது ஆண்டு தொகையாக நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள், அதுதான் பிரீமியம்..

பிரீமியத்தை நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், அந்த திட்டத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் உருவாகிறது..
எல்ஐசி பிரீமியம் வருமானம்
பிரீமிய வருமானம் என்பது உங்கள் கொடுத்த பிரீமியத்தின் மூலம் கிடைக்கும் தொகை மற்றும் அதற்கான வட்டி அல்லது லாபம் சேர்ந்து, நீங்கள் கால அளவுக்குள் பெறும் பணம் ஆகும்.. உதாரணமாக, நீங்கள் ஒரு வருமான திட்டத்தில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால், முடிவில் நீங்கள் பெறும் தொகை உங்கள் செலுத்திய பிரீமியத்தையும் அதற்கான வருமானத்தையும் சேர்த்து இருக்கும்..
முக்கியமாக, பிரீமிய வருமானம் என்பது உங்கள் முதலீட்டின் லாபம் மாத்திரம் அல்ல.. அது நீங்கள் செலுத்தும் தொகை + நிறுவனத்தின் கொடுக்கும் வட்டி மற்றும் லாபம் சேர்ந்து உருவாகும் மொத்த வருமானம்.. இதனால், நீங்கள் எவ்வளவு காலத்திற்கு, எவ்வளவு தொகையை செலுத்துகிறீர்கள் என்பதையும், திட்டத்தின் வட்டி விகிதத்தையும் கருத்தில் கொண்டு உங்கள் எதிர்பார்ப்பு வருமானத்தை கணிக்க முடியும்..
எல்ஐசி பாலிசிதாரர்கள்
இந்நிலையில், எல்ஐசி நிறுவனத்தின், மொத்த பிரீமிய வருமானம் கடந்த 9 மாதங்களில், 3.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த தொகையானது, அதற்கு முந்தை காலத்தை ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம் என்கிறார்கள்..
இதுகுறித்து , எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி அறிக்கை ஒன்றை விரிவாக வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது:
"மத்திய அரசின் ஜி.எஸ்.டி., 2.0, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மிகவும் சாதகமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் நிறைவில், வரிக்கு பிந்தைய லாபம் 16.68 சதவீதம் அதிகரித்து, 33,998 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த ஆண்டு பிரீமியம், 15.88 சதவீதம் அதிகரித்து, 44,007 கோடி.
வணிக வருமானம்
புது வணிக பிரீமிய வருமானம், தனிநபர் பிரிவில் 5.89 சதவீதம் அதிகரித்து, 44,941 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த குழும வணிக பிரீமிய வருமானம், 13.56 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்து 35,302 கோடி; மொத்த பிரீமிய வருமானம் 9 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 71,293 கோடி; புதிய வணிகத்தின் மதிப்பு 27.96 சதவீதம் அதிகரித்து, 8,288 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளன.
எல்.ஐ.சி.,யில் புதிய திட்டங்கள், மாற்று வழிகளில் வணிகம் போன்றவற்றில், சிறப்பான நிலையை அடைந்துள்ளோம். பல்வேறு டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு, கிராமப்புறங்களில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய, பீமா சகி யோஜனா திட்டம் வாயிலாக, பெண் முகவர்களின் படையை உருவாக்குவதில், தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். வரும் 2047ல் அனைவருக்கும் காப்பீடு என்ற தேசிய இலக்கை அடைய, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் லாபம்
எல்.ஐ.சி நிறுவனத்தின் லாபம் 16 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்பது அந்த நிறுவனத்தில் பாலிசி வைத்துள்ள சாதாரண மக்களுக்குக் கூடுதல் பாதுகாப்பையும், எதிர்காலத்தில் அதிக போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்பையும் உறுதி செய்கிறது.
அதுமட்டுமல்ல, மத்திய அரசின் ஜி.எஸ்.டி 2.0 மாற்றங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளதால், நிர்வாகச் செலவுகள் குறைந்து அதன் லாபம் பாலிசிதாரர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
குறிப்பாக, 'பீமா சகி யோஜனா' என்ற புதிய திட்டத்தின் மூலம் கிராமப்புறப் பெண்களுக்குக் காப்பீடு முகவர் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது, கிராமங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதுடன், அடித்தட்டு மக்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் கொண்டு செல்லும் ஒரு மிகச்சிறந்த நன்மையாகும். பாலிசிதாரர்களும் மொபைல் மூலமாகவே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
ஆனாலும், கிராமப்புறங்களில் இணைய வசதி குறைவாக உள்ள இடங்களில் இந்தச் சேவைகளைத் தடையின்றி வழங்குவது ஒரு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும், நிறுவனத்தின் நிதி வலிமை அதிகரித்திருப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும், சாமானிய வாடிக்கையாளர்களுக்கும் ஒரு பலமான நம்பிக்கையைத் தந்துள்ளது...!!












Click it and Unblock the Notifications