இ செல்லான் அபராதம்! 3 மாதத்தில் செலுத்தாவிட்டால் லைசன்ஸ் ரத்தாகிடும்.. மத்திய அரசின் அதிரடி திட்டம்
சென்னை: போக்குவரத்து விதி மீறல்களுக்கான இ செல்லான் அபராதத்தை மூன்று மாதங்களுக்கு செலுத்தவில்லை என்றால் டிரைவிங் லைசன்சை ரத்து செய்யும் வகையில் புதிய விதிகளை கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபராத தொகையை பாதிக்கும் மேற்பட்டவர்கள் செலுத்தாமல் இருப்பதால் இத்தகைய விதிகளை கொண்டு வர அரசு திட்டமிட்டு இருக்கிறதாம்.
உலக அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. விபத்துக்களுக்கு பெரும்பாலும் சாலை விதிமீறல்களே காரணமாக இருப்பதால், சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, சாலை விதி மீறல்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

3 மாதங்கள் மட்டும் அவகாசம்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10,000 அபராதம் மற்றும் / அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும் / அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1,000 அபராதம் என அபராத தொகை கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஸ்பாட் பைன் போடப்படுகிறது.
இ செலான் முறையில் அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பலரும் அபராதத்தை கட்டாமல் பெண்டிங் வைத்து இருக்கிறார்கள். இதனால், ஆயிரக்கணக்கில் செல்லான் தொகை நிலுவையில் இருக்கும். இதற்கு செக் வைக்கும் விதமாகத்தான் மத்திய அரசு புதியம் திட்டம் ஒன்றை கையில் வைத்து இருக்கிறதாம். அதாவது, போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் விதிக்கப்பட்டால் அதை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்.
டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்
அபராதம் செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நபரின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதே ஒரு நிதி ஆண்டில் மூன்று மூறை வாகன விதி மீறலில் ஈடுபடுதல் அதாவது, சிக்னல் ஜம்பிங், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்டால் அவரக்ளின் டிரைவிங் லைசன்ஸ் குறைந்தது மூன்று மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கோண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விதி மீறலில் ஈடுபடும் டிரைவர்களை கட்டுப்படுத்த அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவை உள்ளதாம். சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் போது 40 சதவீதம் பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்துவதாகவும் பெரிய எண்ணிக்கையில் பலரும் அபராதம் கட்டாமல் இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது.
அபராதம் கட்டும் வரை தொடர்ந்து குறுஞ்செய்தி
அதுமட்டும் இன்றி முந்தைய நிதி ஆண்டில் இரண்டு நிலுவை அபராத தொகை வைத்து இருந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகையும் அதிகமாக இணைக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கவும் அரசு பணியாற்றி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்படுவதில் உள்ள சில குறைபாடுகளும் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது, தவறான செல்லான்கள், அபராதம் விதிக்கப்பட்டடதற்கான அலர்ட் தாமதமாக வருவது போன்றவையும் காரணமாக உள்ளது. எனவே இது போன்ற குறைபாடுகளுக்கு தீர்வு காணும் விதமாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாகவும் அரசு திட்டமிட்டுள்ளது. அபராதம் கட்டும் வரையிலும் மாதம் தோறும் வாகன ஓட்டிகளுக்கு மெசேஜ் மூலமாக அலர்ட் செய்து கொண்டே இருப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications