சென்னை மெட்ரோ.. இனி "சங்கீத" மெட்ரோ.. கச்சேரிக்கு ஏற்பாடு செய்யும் நிர்வாகம்.. சூப்பர் காரணம்!
சென்னை மெட்ரோ.. இனி "சங்கீத" மெட்ரோ.. கச்சேரிக்கு ஏற்பாடு செய்யும் நிர்வாகம்.. சூப்பர் காரணம்!
சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வார இறுதி தொடங்கி அடுத்த ஒரு மாதத்திற்கு நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக அவ்வப்போது நிர்வாகம் சில முயற்சிகளை செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்த இருக்கிறது. அதன்படி, சென்னை தெருக்களின் இசைக் கலாச்சாரத்தை தொடர்ந்து மக்களிடத்தில் பரப்பி வரும் 'ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை' குழுவுடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

நேரடி இசை நிகழ்ச்சி
தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி முதல் அடுத்தடுத்த நாட்களில் விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் தொடங்கி விம்கோ நகர் டிப்போ மெட்ரோ வரை நிகழ்ச்சி நடைபெறும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கிண்டி மெட்ரோ, ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருமங்கலம் மெட்ரோ, ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாதம் முழுவதும்
ஆகஸ்ட் 27 ஆம் தேதி விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோ வரை ரயிலில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர், மெட்ரோ ரயில் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 அரசு பள்ளி மாணவர்களை இலவசமாக ரயிலில் பயணம் செய்ய வைத்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதன் தொடர்ச்சியாக தற்போது நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து வரவேற்று வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயிலும் - புதிய திட்டங்களும்
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தற்போது பர்பிள் லைன் 3 திட்டம் கட்டுமானத்தில் உள்ளது. இது சிறுசேரி சிப்காட் II-லிருந்து மாதவரம் பால் பண்ணை வரை செல்லும். இந்த வழித்தடங்களில் மொத்தம் 48 நிலையங்கள் இருக்கும். இவற்றில், 29 நிலத்தடியிலும், 19 உயர்மட்டமாகவும் அமைக்கப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், மாதவரம் என்பது சென்னையின் புறநகர்பகுதி. ஆந்திரா செல்வதற்கான புறநகர் பேருந்து நிலையமும் இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது சென்னையின் எக்ஸிட் பாயிண்ட் என்றும் இந்த பகுதி அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த பகுதியை சென்னை நகரத்துடன் இணைப்பதில் இந்த மெட்ரோ வழித்தடம் முக்கிய பங்காற்றுகிறது.

ஆரஞ்சு லைன்
இதைதொடர்ந்து,ஆரஞ்சு லைன் 4 வழித்தடமும் கட்டுமானத்தில் உள்ளது. இது கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லும். இந்த பாதையில் 28 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த நிலையங்களில், 10 நிலத்தடியிலும், 18 உயர்மடத்திலும் அமைக்கப்படுகின்றன. ஆரஞ்சு வழித்தடத்தின் மொத்த நீளம் 26 கிமீக்கு மேல் இருக்கும்.
இறுதியாக ரெட் லைன் 5 வழித்தடமும் கட்டுமானத்திற்கு தயாராகி வருகிறது. மாதவரம் பகுதியை சோழிங்கநல்லூர் பகுதியுடன் இணைக்கும் இந்த முக்கிய மெட்ரோ பாதையில் மொத்தம் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். இதில் 41 நிலையங்கள் உயர்மட்டத்திலும், 1 தரைநிலை மற்றும் 6 நிலையங்கள் நிலத்தடியிலும் அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. இந்த வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி வில்லிவாக்கம், கோயம்பேடு மார்கெட், விருகம்பாக்கம், கோவிலம்பாக்கம் என சுற்றி இறுதியாக சோழிங்கநல்லூர் வந்தடைகிறது.

மயிலாப்பூர்
இந்த 3 வழித்தடங்களில் மட்டும் 128 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் மயிலாப்பூர் ரயில் நிலையம் 4 அடுக்கு ரயில் நிலையமாக அமைய இருக்கிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் , பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் ஆகியவைகளை இணைக்கும் நிலையமாக மயிலாப்பூர் உள்ளது. பூமிக்கு அடியில் 114 அடி ஆழம், 492 அடி நீளத்திலும், நான்கு அடுக்குகளாக அமையும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் பயணியர் நடமாடும் பகுதி, பயணச்சீட்டு வழங்குமிடங்களும், மற்ற மூன்று தளங்களிலும் ரயில் நிலையங்கள் செயல்படும்.
இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் 2026க்குள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications