8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை? மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் 21ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த மே மாதம் 36 ஆயிரம் என்கிற அளவில் உயர்ந்து இருந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

இதன் படி மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்தார். பொதுபோக்குவரத்தை ரத்து செய்ததுடன் அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டார் அதன்பின்னரும் தொற்று குறையாததால் கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்தார். மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டார். காவல் துறை சோதனையை கடுமையாக்க நடவடிக்கை எடுத்தார்.

கடைகள் திறப்பு

கடைகள் திறப்பு

தளர்வுகளற்ற ஊரடங்கால் மக்கள் வெளியில் சுற்றுவது குறைந்தது. இதனால் கொரோனா பாதிப்பும் படிப்படியாக குறைந்தது. இதனால் ஜூன் 7ம் தேதியில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மீன், இறைச்சி, ஹார்டுவேர் கடைகள், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பபட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி தரப்படவில்லை.

கோவை ஈரோடு

கோவை ஈரோடு


தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 9 ஆயிரத்திற்கு கீழ்வந்துள்ளது. கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் உள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது
நேற்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,000-க்கும் கீழே 8,633 என்கிற எண்ணிக்கையிலும், சென்னை பாதிப்பு 500-க்கும் கீழே 492 என்கிற எண்ணிக்கையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 89,009 ஆகக் குறைந்துள்ளது. தினசரி குணமடைவோர் எண்ணிக்கையும் 19,860 ஆக அதிகரித்துள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு

தளர்வுகளுடன் ஊரடங்கு

இந்நிலையில் . 7 நாட்களுக்கு ஒரு முறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி அமலான ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு

இந்த ஆலோசனையில் தமிழகத்தில் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து மருத்துவ நிபுணர்கள் திருப்தி தெரிவித்தனர். தடுப்பூசியை அதிகப்படுத்துவது, அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள், சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதே தொற்றை மேலும் குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.. தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தொழில்களுக்கு அனுமதி

தொழில்களுக்கு அனுமதி

தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கலாம். தொற்று குறையாத 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குதல், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குதல், பல்வேறு தொழில்களுக்குத் தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து இன்று முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இபதிவு முறை தொடரும் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+