அந்த ஒரு 'சிகரெட்' கேள்வி.. ஏய்.. தப்பு.. கேள்வி கேட்க உரிமை இருக்கிறது.. கொந்தளித்த துரை வைகோ!
திருச்சி: லோக்சபா தேர்தலில் மதிமுக வேட்பாளராக திருச்சியில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ, செய்தியாளர் ஒருவரது கேள்விக்காக தொண்டர்களிடம் கொந்தளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் மதிமுகவுக்கு திருச்சி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன், துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரை வைகோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொரோனா கால சவால்களை எதிர்கொண்டு திமுக ஆட்சி செயல்பட்டது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு நிதி நிலை நெருக்கடி இருந்த போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். நிதி நெருக்கடி இருந்த போதும் மகளிர் உதவித் தொகை கொடுத்து வருகிறது திமுக அரசுதான் என்றார்.
மேலும், திருச்சியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருச்சியில் புதிய விமான நிலையம் திறந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த திருச்சி புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் பல மாதங்களாகும் என்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று வரை எதுவும் நடக்கவில்லை. அதே நிலைமைதான் திருச்சி விமான நிலையத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார் துரை வைகோ.
இந்த சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர், சிகரெட் கம்பெனி நடத்துகிறவர்கள் எல்லாம் நாட்டு நலனில் அக்கறையா இருப்பாங்களா?ன்னு கேட்கிறார்களே என கேள்வி எழுப்பினார். இதற்கு, இல்லை.. இல்லை.. தோழர்கள் ஆத்திரப்படாதீங்க.. பத்திரிகை நண்பர் அவருடைய கேள்வியை கேட்கிறார்.நில்லு.. நில்லு.. ஏய்.. தப்பு (நிர்வாகிகளைப் பார்த்து).. (ஆவேசமாக) பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு.. அவரை இன்சல்ட் பண்ண கூடாது; அவருடைய கேள்வியின் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இங்க இருக்கிற பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். நான் பதில் சொல்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து ஐடிசி டிஸ்ட்ரிபியூட்டராக பினாமி பெயரில் அல்ல என் பெயரில்தான் 16 ஆண்டுகள் நடத்தினேன். ஐடிசி 5% தான் புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறது. மது எப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடோ அதே போல புகையிலை பொருட்களும் கேடுதான். அதனால் எனக்கு கிடைத்த அந்த ஒரே ஒரு தொழிலையும் நான் விட்டுவிட்டேன் எனவும் விளக்கம் தந்தார் துரை வைகோ.
-
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications