"நாடக காதல்"களை தடுத்து நிறுத்த.. எந்த கட்சியும் தராத 'அப்படி ஒரு' தேர்தல் வாக்குறுதியை தந்த பாமக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடகக் காதல்களால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, குடும்ப அமைப்பைப் பாதுகாக்க 21 வயதுக்கு கீழானவர்கள் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டயமாக்குவோம் என பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பொதுவாக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பெரும் கவனம் ஈர்க்கும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறும் இலவசங்கள்தான் முதன்மையான பேசு பொருளாகவும் இருக்கும்.

Lok Sabha Election 2024 PMK Promises Mandatory approval of parents for below 21 years marriage

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு நலன், தமிழ் மொழி நலன், தமிழர் நலன் ஆகியவற்றை மையமாக வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும். சில தேர்தல்களில் இந்த தேர்தல் அறிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளில் முக்கிய திருப்பங்களை உருவாக்கிய சரித்திரங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுகவைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் இன்று தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

1.இந்த தேர்தல் அறிக்கையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.

2. உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.

3. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

4. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.

5. கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

7. தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும்.

8. மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

9. தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

10. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

11. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

12. மத்திய & மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும்.

13. நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

14. மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.

15. ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

16. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.

17. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.

18. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

19. சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை இப்போது செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாகவும், திண்டிவனம் வரை 6 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதுடன், அதன்மீது திண்டிவனம் வரை 6 வழி உயர்மட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

என்பது உள்ளிட்ட வழக்கமான வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற ஒரு வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளது. அதாவது, "சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் அவசியம். இந்தியாவில் கர்நாடகா உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தி உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்பைக் காக்கவும் வளிரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியையும் பாமக தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+