9 பாமக வேட்பாளர்கள்: கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்; திண்டுக்கல்- திலகபாமா! அன்புமணி போட்டி இல்லை!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாமகவின் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. பாமகவுக்கு பாஜக கூட்டணியில் மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக வேட்பாளர்கள் விவரம்:
திண்டுக்கல் - திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அன்புமணி போட்டியிடவில்லை: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி போட்டியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாமக வேட்பாளர் பட்டியலில் அன்புமணி பெயர் இடம் பெறவில்லை. இதனால் லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடவில்லை.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications