அண்ணாமலை பெயர் இல்லை! வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தை புறக்கணித்தது ஏன்?பின்னணி இதுதான்
சென்னை: 195 லோக்சபா தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் ஒரு தொகுதிக்கு கூட வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அண்ணாமலையின் பெயர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்காத நிலையில் அதன் பின்னணி காரணம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்த 27 பேருக்கும், ஓபிசி பிரிவை சேர்ந்த 57 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோடி முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வந்த தலைவர்களின் லிஸ்ட்
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 20, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 15, கேரளாவில் 12, தெலுங்கானாவில் 9, அசாம், ஜார்கண்ட் , சத்தீஸ்கர் மநாிலங்களில் தலா 11, டெல்லியில் 5, உத்தர காண்ட்டில் 3, ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவா, திரிப்புரா, அந்தமான் நிகோபார், டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் தலா ஒரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு கூட பாஜக மேலிடம் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மேலிடம் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் திருநெல்வேலி தொகுதியில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை போட்டியிட வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர்கள் யாருடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
195 வேட்பாளர்கள்.. வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி! வெளியானது பாஜகவின் வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில் தான் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறாததன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. தற்போது பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அந்த கட்சி வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட ஒரு தொகுதியில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவார்களா? என்பது சந்தேகம் தான் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில் பிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.
‛‛இந்த 3ல் ஒரு தொகுதி வேண்டும்’’.. ஜான்பாண்டியன் வைத்த கோரிக்கை.. பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை
பாஜக தலைமையிலான 3வது அணியை உருவாக்க அண்ணாமலை முயன்று வருகிறார். இதுதொடர்பாக பிற கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேபோல் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைக்கலாமா? வேண்டாமா? என்பதில் இன்னும் பாஜக உறுதியான முடிவை எடுக்கவில்லை.
மேலும் பாஜக இன்னும் கூட அதிமுகவின் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் அதமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக கூறி வருகிறார். ஆனாலும் கூட தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் நிலைமை மாறும் என பாஜக மேலிடம் நம்புவதாக கூறப்படுகிறது. இப்படி இன்னும் கூட்டணி முடிவாகாத நிலையில் வேட்பாளர் அறிவித்தால் சரியாக இருக்காது என பாஜக மேலிடம் எண்ணி இன்றைய பட்டியலில் தமிழகத்தை சேர்க்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications