195 வேட்பாளர்கள்.. வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி! வெளியானது பாஜகவின் வேட்பாளர் பட்டியல்
டெல்லி: இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியிலும், மத்திய உள்துறை அமைச்சர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2014, 2019ம் ஆண்டில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தது போல் வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவதற்கு தேவையான பணிகளை பாஜக மேலிடம் தீவிரமாக செய்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வென்றது. வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளன.
பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியா? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!
இன்னும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் வரும் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2 நாட்களாக பாஜக தலைவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நள்ளிரவு வரை இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டனர். அதன்பிறகு நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சந்தித்து நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
129 தொகுதிகளில் 100 இடங்களில் தோல்வி தான்.. பாஜகவுக்கு ஷாக் தரும் தென்மாநிலங்கள் - கருத்து கணிப்பு
இந்த வேளையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெரும் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர்களை அறிவித்தார்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரபலமான பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட பாஜக மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி களமிறங்கலாம். அவர் ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் 3வது முறையும் அங்கு போட்டியிடுகிறார்.
அதிகாலையிலேயே வந்த லஞ்ச ஒழிப்பு துறை.. அதிமுக Ex MLA பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு
அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து 2வது முறையாக களமிறங்கி உள்ளார். இங்கு கடந்த 2019 தேர்தலில் அமித்ஷா வென்ற நிலையில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மீண்டும் ராஜ்நாத் சிங் போட்டியிட்டுள்ளார். கடந்த 2014, 2019 தேர்தலில் ராஜ்நாத் சிங் இங்கு வென்ற நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications