தர்மபுரி எம்பி செந்தில் குமார் உள்பட! திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்பிக்கள் யார் யார்?
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியலை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் தர்மபுரி எம்பி செந்தில் குமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மூன்று பெண் வேட்பாளர்கள்: இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி (தனி) தொகுதியில் ராணி சிவக்குமார் என மூன்று பெண் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது.
சிட்டிங்க் எம்பிக்களுக்கு வாய்ப்பு இல்லை: வேட்பாளர் பட்டியலில் தற்போது சிட்டிங் எம்.பிக்களாக இருக்கும் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தர்மபுரி தொகுதி எம்பியாக இருக்கும் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்பியாக இருக்கும் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, சேலம் பார்த்திபன், தஞ்சையில் 6 முறை எம்பியாக இருந்த பழனி மாணிக்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன், தர்மபுரி தொகுதியில் ஆ மணி, சேலம் தொகுதியில் செல்வ கணபதி, தஞ்சை தொகுதியில் முரசொலி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி (தனி) தொகுதியில் திமுக எம்பியாக இருக்கும் தனுஷ் எம். குமாருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ராணி சிவக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் சண்முகசுந்தரம் சிட்டிங் எம்பியாக இருந்து வருகிறார். அவருக்கு போடியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பொள்ளாச்சியில் ஈஸ்வர சாமி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் புதுமுகம் ஆவார்.












Click it and Unblock the Notifications