‛ஏப்ரல் 19’ ஓட்டுப்போட லீவு கேட்டாச்சா? ஊதியத்துடன் விடுப்பு அளிக்க கூறும் சட்டம்.. ரூல்ஸ் இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் என்பது நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் ஊழியர்கள், பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இப்படி விடுமுறை அளிக்காவிட்டால் பணியாளர்கள் புகார் அளிக்கலாம். இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடே எதிர்பார்த்த லோக்சபா தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

அதன்படி லோக்சபா தேர்தல் என்பது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேதி வாரியாக கூற வேண்டும் என்றால் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என மொத்தம் 7 தேதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் முதற்கட்டமாகவே தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதில் மே 25 மட்டும் சனிக்கிழமை வருகிறது. பிற 6 தேர்தல் தேதிகளும் வார நாட்களில் நடைபெற உள்ளது.
பொதுவாக தேர்தல் சமயத்தில் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு தபால் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படும். இருப்பினும் லோக்சபா தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் தேர்தல் சமயத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. மேலும் அதனை மீறினால் குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
தேர்தல் முறைகேட்டை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி.. பட்டுவாடாவை தடுக்க 8 "முக்கிய" உத்தரவு
அதாவது இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ஓட்டளிக்க தகுதியானவர்கள். தேர்தல் சமயத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பது இலக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட 100 சதவீத ஓட்டு என்பது பதிவாகாத நிலை தான் உள்ளது. தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிக்காமல் இருப்பதற்க பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் பணி நிமித்தத்தால் ஒருவர் வாக்குரிமையை தவற விடக்கூடாது என்பது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரசியலமைப்பின்படி 18 வயது நிரம்பியோருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை மறுக்கக்கூடாது என்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, (RP ACT)ன்படி அனைத்து நிறுவனமும் தங்கள் பகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் போது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறுகிறது. இந்த சட்டத்தின் பிரிவு 135 பி என்பது தேர்தல் நாளில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க பரிந்துரை செய்கிறது.
இந்தியா முழுமைக்கும் பொருந்தும் இந்த சட்டத்தில் சில சிறப்பம்சங்களும் உள்ளன. உதாரணமாக தமிழ்நாட்டில் ஓட்டு இருக்கும் பட்சத்தில் சிலர் பெங்களூர், டெல்லி உள்பட பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பணியாற்றலாம். அவர்களும் தங்கள் நிறுவனத்தில் ஏப்ரல் 19 ல் நடக்கும் தேர்தலை சுட்டிக்காட்டி ஓட்டளிக்க வரலாம். இப்படி வருவோரும் ஊதியத்துடன் கூடிய விடுப்பை கோரலாம்.
இன்று முதல் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? தேர்தல் நடத்தை விதியால் பெரிய மாற்றம்! லிஸ்ட்டை பாருங்க
இது அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். அதாவது தேர்தல் நாளில் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். ஒருவேளை நிறுவனங்கள் இந்த சட்டத்தை பின்பற்றி தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காவிட்டால் சம்பந்தப்பட்டவர் தேர்தல் ஆணையத்திலோ அல்லது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். இந்த புகாரை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு அபாராதம் விதிக்கப்படுவதோடு, தேர்தல் விதிமீறல் வழக்கும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications