லோக்சபா தேர்தல்: கட்சி பணிகளில் வேகம் காட்டும் டிடிவி தினகரன்! தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அரசியல் கட்சிகள் தற்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக மெகா கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் பாஜக பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், டிடிவி தினகரனும் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்படியான சூழலில், நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சி பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி வாரியாக டிடிவி தினகரன் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி கீழ்காண்பவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்:
உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி - திரு.K.டேவிட் அண்ணாதுரை, கழக இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர். கழக செய்தி தொடர்பாளர்
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி - திரு.G.ராமலிங்கஜோதி, கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்,
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி - திரு.S.மீனாட்சிசுந்தரம், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழக பொருளாளர்,
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி - திருமதி. B.ஜீவிதா நாச்சியார், கழக மாணவியர் அணி செயலாளர்.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி - திரு.V.அருவுகராஜா, கழக விவசாயப் பிரிவு தலைவர், தேனி வடக்கு மாவட்டம்
தேனி வடக்கு மாவட்டம்:
ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி - திரு.விமல்முருகன், கழக பொறியாளர் அணி துணைச்செயலாளர்.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி - திரு.S.அய்யணன், ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய கழக இணைச்செயலாளர்.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி - திரு.V.ராஜேஷ்கண்ணன், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர்.
பெரியகுளம் சட்டமன்றத்தொகுதி - திருமதி.R.அறிவுக்கொடி, தேனி வடக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர்.
பெரியகுளம் சட்டமன்றத்தொகுதி - திரு.ரா.அமர்நாத், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்.
பெரியகுளம் சட்டமன்றத்தொகுதி - திரு.L.ராம்பிரசாத், மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்:
பரமக்குடி சட்டமன்றத்தொகுதி - திருமதி. S. ஜெஸிமா பானு, கழக தகவல் தொழில் நுட்ப மகளிர் பிரிவு செயலாளர்.
பரமக்குடி சட்டமன்றத்தொகுதி - டாக்டர் M. கபிலன், கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர்.
பரமக்குடி சட்டமன்றத்தொகுதி - திரு. M.சரவணக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்.
முதுகுளத்தூர் சட்டமன்றத்தொகுதி - திரு. V.K.G.முத்துராமலிங்கம், கமுதி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர்.
முதுகுளத்தூர் சட்டமன்றத்தொகுதி - திரு.சிவ.இராமச்சந்திரன், இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர்.
முதுகுளத்தூர் சட்டமன்றத்தொகுதி - திரு. வே. முனியசாமி, இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக பொருளாளர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக செயலாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி திறம்பட செயலாற்றிட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தொகுதி பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications