பாஜகவிற்கு படுதோல்வி.. ஆட்சி அமைக்கிறது இந்தியா கூட்டணி.. அடித்து சொல்லும் அந்த கருத்து கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு படுதோல்வி ஏற்படும், இந்தியா கூட்டணியே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டிபி லைவ் நியூஸ் சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

Lok Sabha election 2024 BJP Congress 2024

இந்த நிலையில்தான் பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

37 இடங்களில் இந்திய கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்தித்தன.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தனிப்பெரும் கூட்டணியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியான கணிப்புகளில் இந்த கணிப்பில் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக சர்வே கொடுக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு கணிப்பு: இது போக 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு படுதோல்வி ஏற்படும், இந்தியா கூட்டணியே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டிபி லைவ் நியூஸ் சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அதில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி 255-290 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 207-241 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மற்ற கட்சிகள் 29- 51 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37-39 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக 0-1 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தீவிரமான தேர்தல்: லோக்சபா தேர்தல்: உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்.

நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+