Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கொஞ்சம் இதை பாருங்க" பிரதமர் மோடியிடம் சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. மேடையில் நடந்த சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை இன்று சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டி துவக்க விழாவின் போது வாணவேடிக்கை நடந்தது. இதனை உற்று கவனித்து பார்க்குமாறு மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். முதல் நாளான இன்று சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்த பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, சாலை மார்க்கமாக காரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வந்தார்.

Look at this Udhyanidhi Stalin pointed out Pm modi about khelo India opening ceremony function

அப்போது சாலையில் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதேபோல் தமிழக பாரம்பரியப்படி கலை நிகச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூக்களை வீசியும் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடியும் மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். இதனை தொடர்ந்து தேசிய கீதத்துடன் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி துவக்க விழா தொடங்கியது.

மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி காரில் வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், கேலோ இந்தியா இளைஞர் போட்டிக்கான துவக்க விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது மேடையில் இடது புறம் கடைசியாக அமர்ந்து இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்தியில் அமர்ந்து இருந்த பிரதமர் மோடியிடம் சென்று, "இதனை சற்று உற்று கவனியுங்கள்" என்று கூறிவிட்டு சென்றார். அப்போது வண்ணமயமான வாணவேடிக்கை நடந்தது. வாணவேடிக்கைக்கு முன்பாக, வாலி பால், பளு தூக்குதல், குத்துச்சண்டை, யோகாசனம், சிலம்பம் என்ற ஆங்கில வார்த்தை எழுத்தக்களுடன் அது போன்ற புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனை தான் பிரதமர் மோடியிடம் உற்று கவனித்து பாருங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தொடர்ந்து 60..59..58.. என கவுண்ட் டவுன் தொடங்கி வண்ண விளக்குகள் எரிந்தபடி, வாண வேடிக்கையுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, சுடரை ஏற்றி வைத்து கேலோ இந்தியா இளைஞர் போட்டியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+