அவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்க.. அதையே நாங்க மாத்தி சொல்றோம்.. இது அமமுக தேர்தல் அறிக்கை
Recommended Video

சென்னை:ஒரே விஷயத்தை மாற்றி, மாற்றி பல பேர் சொன்னால் எப்படி இருக்கும். உங்களுக்கு போரடிக்கும் அல்லவா? அதுபோல் தான் தேர்தல் என்று வந்தாலே, நாங்கள் என்ன செய்வோம் என்று கூறி வாக்குறுதிகளை கொண்ட அறிக்கை ஒரே மாதிரியாக இருந்தால் எப்படியிருக்கும்? அதுபோல... தான் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கை என்ற ஒரு விஷயம் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.
எதையுமே வெள்ளைக்காரர்களை பார்த்து செய்துவிட்டு பழகிய நாம்... இந்த தேர்தல் அறிக்கை என்ற நடைமுறையை அவர்களை பார்த்து தான் காப்பியடித்து இருக்கிறோம். உலகிலேயே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்தான் முதன்முதலாக தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வெடிக்க காத்திருக்கும் 'ஏகே 47'.. மிரட்ட தயாராகும் ஜெகத்ரசட்சகன்.. அனல் பறக்கும் அரக்கோணம்!

தேர்தல் அறிக்கை
இந்தியாவில் 1919ம் ஆண்டு வாக்கில் திலகர் தான் முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு கிடைத்த அறிவிப்போ... யாரும் எதிர்பாராதது.

மக்கள் நலனே முக்கியம்
அதன் பின் பல அரசுகள் வந்து மக்கள் நலனே பிரதானம் என்று முழங்கி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது என்பதே சுவாரசியமான ஒன்று. தற்போது சுவாரசியம் என்பதை விட.. சம்பிரதாயம் என்ற ஒரு வார்த்தையாக அவை மாறிவிட்டன.

தேர்தல் பிரச்சாரம்
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் காலம்... கிட்டத்தட்ட சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணிகள், தேர்தலுக்கான வேட்பாளர்கள், பிரச்சாரம் என அனைத்தும் முடிவாகி விட்டது. தேர்தல் அறிக்கைகளும் வெளியாகி விட்டன.

பல ஒற்றுமைகள்
அவற்றில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் பல ஒற்றுமைகள் காணப்பட்டன. ஒற்றுமையே காணாத விஷயம் என்றால்... திமுக தேர்தல் அறிக்கை என்றால் செய்வோம்... நடவடிக்கை எடுப்போம் என்று இருந்தது.

ஏற்பார்களா?
ஆனால்... அதிமுக தேர்தல் அறிக்கையிலோ... வலியுறுத்துவோம்.. முயற்சிப்போம் என்று இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆட்சியில் இருந்து கொண்டே... அதை செய்வோம்.. இதை செய்வோம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமமுக அறிக்கை
கல்விக்கொள்கை, பொருளாதார கொள்கை, நெசவாளர் நலன், நதிநீர் இணைப்பு, எழுவர் விடுதலை என பல அம்சங்கள் திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் ஒற்றுமைகளாக இருக்கின்றன. அவற்றோடு... தற்போது டிடிவி தினகரனின் அமமுகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஒன்று சேர்ந்துள்ளது.

வாக்குறுதிகள் அளிப்பு
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும், மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகள் அமமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூறுவது என்ன?
அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி என்று அமமுக தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறது. இதையே தான் அதிமுக வலியுறுத்துவோம் என்று அவர்கள் பாணியில்(மரபணு மாற்றப்பட்ட பாஜக)கூறியிருக்கிறார்கள்.

திமுகவின் வாக்குறுதி
ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து, காவிரி மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலாக அறிவிக்க வலியுறுத்தல் என்று திமுக சொல்லி இருக்கிறது. அதையே தான்.. விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக கூறியிருக்கிறது.

ஆலை உற்பத்தி
அதே நேரத்தில் மதுபான ஆலை உற்பத்திக்கு அனுமதி கிடையாது, முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000 த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும், 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் ஆகிய வாக்குறுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

பொதுவான விஷயங்கள்
இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு பெறும்? மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே? அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பொதுவாக பல விஷயங்களை தொட்டிருந்தாலும், அதிமுக தங்களால் எது முடியுமோ அதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

விமர்சனங்கள் வரும்
ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை தங்கள் அதீத நம்பிக்கையையும், நிறைவேற்ற முடியாத ஒன்றை அளித்திருப்பதாகவே இருப்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இப்போது அதே பல்லவியை அமமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் விமர்சனங்கள் எழ வாய்ப்பு உள்ளது. ஆக... யாருடைய வாக்குறுதியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதை அவர்கள் அளிக்கும் வாக்குகளும்... அதனை சொல்லும் தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்தும் என்பது அக்மார்க் உண்மை.












Click it and Unblock the Notifications