வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் தட்டி எடுக்கப்போகும் கனமழை..புயலாக மாறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி


புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவம்பர் 11ஆம் தேதிக்குள் நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயலாக மாறாது

புயலாக மாறாது

புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மிக கனமழை பெய்யுமோ, புயலாக மாறுமோ என மக்கள் அச்சம் எழுந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 கனமழை

கனமழை

இந்நிலையில், சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய இருக்கிறது.

 மிக கனமழை

மிக கனமழை

நவம்பர் 11ஆம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+